குள்ளர்களால் நிறைந்த அதிசய கிராமம்…!!

Read Time:3 Minute, 3 Second

yangsi_dwarfs_002சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள Yangsi என்ற கிராமத்தில் உள்ள 40 சதவிகித மக்கள் குள்ளர்களாகவே உள்ளனர்.
பல்லாண்டுகளாக அந்த கிராமத்தில் குள்ளர்களின் எண்ணிக்கை அதிகரித்த படியே உள்ளதால், விஞ்ஞானிகள் அதற்கான காரணம் என்னவென்று அறியாமல் குழப்பமடைந்துள்ளனர்.

”குள்ளர்களின் கிராமம்” என்றழைக்கப்படும் அந்த கிராமத்தில் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவர்களுக்கு 5 முதல் 7 வயது ஆகும் நேரத்தில் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

சுமார் 60 ஆண்டு காலமாக அந்த கிராமத்தில் இந்த வினோதம் நடந்து வருகிறது.

அந்த கிராமத்தில் உள்ள மக்களில் அதிக உயரமே 3 அடி தான் என்றும், குறைந்த உயரம் 2 அடி என்றும் கூறப்படுகிறது.

அந்த கிராமத்தில் உள்ள முதியவர்கள் இதுபற்றி கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பு கோடை கால இரவு ஒன்றில் ஒரு கொடிய நோய் அந்த கிராமத்தை தாக்கியதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கிராமத்தில் உள்ளவர்கள் உயரக் குறைபாடு மட்டுமல்லாமல் இன்னும் சில உடல் குறைபாடுகளாளும் அவதிப்படு வருகின்றனர்.

அறிவியல் விஞ்ஞானிகள் இந்த் கிராமத்தில் உள்ள நீர், நிலம், மணல் மற்றும் உணவு தானியங்களை ஆய்வு செய்ய சென்று வருகின்றனர்.

ஆனாலும் அவர்களால் அந்த கிராமத்தினர் குள்ளமாக இருப்பதன் காரணத்தை அறிவியல் பூர்வமாக விளக்க முடியவில்லை.

அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில், இந்த கிராமத்தில் 1951ம் ஆண்டு முதல் தான் இந்த குறைபாடு தொடங்கியிருக்க வேண்டும்.

அதிகார்வப்பூர்வமாக 1951ம் ஆண்டு தான் குள்ளர்கள் இருந்ததாக கருதப்பட்டாலும், 1911ம் ஆண்டிலேயே குள்ளர்கள் நிறைந்த கிராமம் இருந்ததாக சில வெளிநாட்டவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு பல கதைகளும் காரணங்களும் கூறப்பட்டாலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவியல் காரணம் இன்றுவரை தெரியவில்லை.

இந்நிலையில் தற்போது அங்கு பிறக்கும் குழந்தைகள் இந்த குறைப்பாட்டால் பாதிக்கப்படுவது பெருமளவில் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடிகார கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி…!!
Next post பிரான்ஸ் நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற அகதி: ரயில் சக்கரங்களில் சிக்கி உயிரிழந்த கோர சம்பவம்…!!