கைப்பேசியில் பாட்டு கேட்டுக்கொண்டு சாலையை கடந்த இளைஞன்: நிகழ்ந்த விபரீத சம்பவம்…!!

Read Time:2 Minute, 38 Second

tram_001சுவிட்சர்லாந்து நாட்டில் கைப்பேசியில் பாட்டு கேட்டுக்கொண்டு சாலையை கடந்த இளைஞன் ஒருவன் வேகமாக வந்த ட்ராம் வண்டி மீது மோதியதில் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தி அந்நாட்டு காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அண்மையில் கூட, பாதசாரிகள் சாலையை எவ்வாறு கடக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் ஒரு பிரத்தியோக வீடியோ ஒன்றை தயாரித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், பொலிசாரின் எச்சரிக்கை அறிவிப்புகளை மீறியும் இளைஞர்களின் அஜாக்கிரதையில் சில விபத்துக்கள் நிகழ்வது பொலிசாரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை மாலை 5.15 மணியளவில், பேசில் மண்டலத்தில் உள்ள Munchenstein என்ற நகரில் 18 வயதுள்ள வாலிபர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கியுள்ளார்.

விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறியபோது, வாலிபர் தனது கைப்பேசியை காதுகளில் இணைத்துக்கொண்டு இசையை ரசித்தவாறு நடந்து வந்துள்ளார்.

மேலும், தனது கைப்பேசியை உபயோகித்துக்கொண்டே சாலையில் நடந்துள்ளார். ட்ராம்-11 வழிச்சாலையை கடக்க முயன்றபோது, எதிரே வந்த ட்ராம் வண்டி ஒன்று அவர் மீது பலமாக மோதி எதிர் தடத்தில் தூக்கி எரிந்துவிட்டு சென்றுள்ளது.

படுகாயம் அடைந்த அந்த வாலிபரை பொதுமக்கள் அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் குணமடைந்து வருகிறார்.

இந்த விபத்து குறித்து வியாழன் அன்று செய்தி வெளியிட்ட பொலிசார், சாலையை கடக்கும்போது தவறாமல் விதிமுறைகளை பின்பற்றுமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 4ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை…!!
Next post விகாரைக் கிணற்றில் விழுந்த சிறுவர்..!!