சீனாவில் லிப்ட் விபத்தில் 11 பேர் பலி

Read Time:58 Second

சீனாவில் வூ-ஷி நகரில் உள்ள 34 மாடிக்கட்டிடத்தில் மேலும் கட்டுமானப்பணி நடந்து வந்தது. 34 மாடி கட்டிடத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் சாப்பாட்டுக்காக லிப்ட் மூலம் கீழே வந்தபோது, லிப்ட் கட்டுப்பாட்டை இழந்து விறுவிறு என்று கீழே இறங்கி தரையில் மோதியது. இதில் லிப்டில் இருந்த 6பேர் பலியானார்கள். 11 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல், அவர்களில் 5 பேர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 11 ஆகியது. சீனாவில் அலுவல் தொடர்பான விபத்துக்களில் தினமும் 320 பேர் பலியாகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இம்ரான்கான் கைது: முன்னாள் மனைவி ஜெமிமா கவலை; முஷரப்பின் ஒடுக்குமுறைக்கு கடும் கண்டனம்
Next post பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும்; இலங்கையிடம் இந்தியா கோரிக்கை!!