பாக்., முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரிக்கு சுதந்திரத்திற்கான பதக்கம்

Read Time:2 Minute, 53 Second

பாகிஸ்தானில் அதிபர் முஷாரப்பிற்கு எதிராக கடும் தீர்ப்புகளை வழங்கிய பாக்., முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியின் சிறப்பான பணியை பாராட்டி ஹார்வர்டு சட்ட கல்லூரி பதக்கம் வழங்கி கவுரவிக்க உள்ளது. பாகிஸ்தானில் தலைமை நீதிபதியாக இருந்தவர் இப்திகார் சவுத்ரி. இவரும் மற்ற நீதிபதிகளும், முஷாரப்பின் ராணுவ ஆதிக்கத்தில் பாகிஸ்தான் அல்லாடுவதையும், ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுவதையும் விரும்பவில்லை. கடந்த 3ம் தேதி பாகிஸ்தானில் அதிபர் முஷாரப் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதற்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தடை விதித்து விடுமோ என அஞ்சிய முஷாரப் இப்திகார் சவுத்ரியையும் மற்ற நீதிபதிகளையும் வீட்டு காவலில் வைத்தார். மேலும் இப்திகாரை நீக்கிவிட்டு புதிய தலைமை நீதிபதியை நியமித்தார்.இப்திகார் சவுத்ரி தலைமை நீதிபதியாக இருந்த போது பாகிஸ்தானில் முஷராப்பின் நடவடிக்கைகளையும், ராணுவ ஆட்சியையும் தனது தீர்ப்பில் கடுமையாக விமர்சித்தார்.இப்திகார் சவுத்ரியின் சிறப்பான செயல்பாட்டையும், நெஞ்சுரத்தையும் பாராட்டி ஹார்வர்டு சட்டக்கல்லுõரி கவுரவமிக்க சுதந்திர பதக்கம் வழங்குவதாக அறிவித்துள்ளது.விருதுக்கு சவுத்ரியை தேர்ந்தெடுத்தது குறித்து கல்லூரியின் டீன் எலீனா காகென் கூறுகையில், ஒரு வக்கீலாக இருப்பவருவக்கு சுதந்திரத்தின் மதிப்பும், சட்டத்தின் மாண்பும் தெரிந்து இருக்க வேண்டும். பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்த இப்திகார் சவுத்ரியையும் அவருடன் இணைந்து நெஞ்சுரத்துடன் பேராடிய வக்கீல்கள் பின்னால் எங்கள் கல்லூரியும் நிற்கிறது என்பதில் பெருமிதம் கொள்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த கவுரவமிக்க பதக்கத்தை ஏற்கனவே பெற்றுள்ளவர்களில் நெல்சன் மண்டேலாவும் ஒருவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராக கால்பந்து வீரர் சிம்சனுக்கு உத்தரவு
Next post பிரியங்கா கணவரை கடத்த சதி