நாட்டுரிமை இல்லாமல் கடல்மேல் வாழும் நாடோடி இனம்! (வீடியோ இணைப்பு)…!!

Read Time:6 Minute, 15 Second

sea_living_003-615x413மக்களின் வாழ்க்கைமுறையில் எத்தனையோ வேறுபாடுகளும் வினோதங்களும் உலகின் பல பகுதிகளிலும் இருப்பதை வலைதள வசதிகள் வந்த பிறகு, மிக எளிதாகவே தெரிந்துகொள்ள முடிகிறது.

மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியான போர்னியோவில் பஜாவு என்ற ஆயிரக்கணக்கான பழங்குடி இன மக்கள் கடலிலேயே வாழ்கின்றனர்.
’கடல் நாடோடிகள்’ என்றே இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
பசிபிக் கடல் போர்னியோவில் ஒரு பெரிய நில வளைவுக்குள் இப்பகுதி அமைந்துள்ளது. அதனால், அங்கு பெரிய அலைகள், ஆரவாரம் ஏதுமின்றி, அமைதியான கடல் பகுதியாக காணப்படுகிறது.

இந்த கடல்பகுதியில் பஜாவு என்ற பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் கடல்மீது மரங்களாலும் பலகைகளாலும் ஆன சிறிய குடில்களை கடல் மட்டத்துக்கு உயரத்தில் அமைத்து அதில் வசித்து வருகின்றனர்.

அவர்கள் சிறிய படகுகளும் வைத்திருக்கின்றனர். அந்த படகுகளை மீன்பிடிக்கவும் கரைக்கு செல்லவும் பயன்படுத்துகின்றனர்.

உண்பது, தொழில் செய்வது, பொழுதுபோக்காக விளையாடுவது இரவில் உறங்குவது என, இவர்களுடைய முழு நேரமும் கடல்மீது அமைந்திருக்கும் வீட்டிலும், படகுகளிலுமே கழிகிறது.
பிடிக்கும் மீன்களை விற்கவும் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்காக மட்டுமே கரையில் இருக்கும் சந்தைக்கு வருகின்றனர். இவர்கள் பணம் வைத்திருக்கவில்லை.

இவர்களுடைய மூன்று நான்கு வயதுடைய குழந்தைகள் கூட தனியாக படகை எடுத்துச் செல்லவும் கடலுக்குள் பாய்ந்து மீன்களை பிடிக்கவும் பழக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள பெரியவர்களும் பெண்களும் கூட மீன் வேட்டையாடுவதிலும், முத்துக் குளிப்பதிலும் ஈடுபடுகின்றனர்.

கடலுக்குள் நீண்டநேரம் மூழ்கும் திறமைகொண்ட இவர்கள் இதற்காக, ஆக்ஸிஜன் சிலிண்டர் எதுவும் பயன்படுத்துவதில்லை. கடல் ஆழத்தில் உள்ள அழுத்தத்தை சமாளிக்க, ஒரு கண்ணாடி மட்டும் அணிகின்றனர்.

படகில் ஆழ்கடலுக்கு சென்று, சுட்டால் கூரான ஈட்டியை பாய்ச்சும் துப்பாக்கி போன்ற ஆயுதத்தின் துணைகொண்டு, கடலில் குதித்து, ஒரே மூச்சில் 25 மீட்டர் ஆழம்வரை சென்று, தங்களுக்கு பிடித்தமான பெரிய மீனை குத்தி பிடித்துக்கொண்டு நீண்ட நேரத்துக்கு பிறகு வருகின்றனர்.

இது இவர்கள் கடல் வாழ் உயிர்களோ என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
கடலுக்குள் இருக்கும் போதும் வீட்டில் இருப்பதுபோலவே இருக்கும் என்கின்றனர்.

படகில் சென்று வலைவீசி வலையோடு கடலுக்குள் குதித்து அணை போல வலையை அமைத்து மீன்கள் கூட்டத்தை தந்திரமாக வலைக்குள் சிக்கவைத்து கூண்டோடு படகில் ஏற்றுகின்றனர்.
உடுத்தும் உடைகளை கடலில் அலசி படகில் கொடிகட்டி உலர்த்துகின்றனர். கைக்குழந்தையையும் மார்பளவு ஆழத்திலே குளிப்பாட்டுகின்றனர்.

டயானா என்ற 50 வயதுடைய பெண் தனது குழந்தைப் பருவத்திலிருந்து இங்கு வசிப்பதை நினைவு கூர்கிறார்.

இவர் ஆரம்பத்தில் படகிலிருந்து கடலில் ’டைவ்’ அடித்து கடலுக்குள் ஆழத்தில் நீண்ட நேரம் இருந்ததால் காது, மூக்கு, கண்கள் ரத்தம் கசியும் அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
பெரிய சிகிச்சைகள் ஏதும் செய்யாமலே இப்போது அதுவே அவருக்கு பழக்கமாகிவிட்டது. ஆனால், இப்போது காது சற்று மந்தமாகவே அவருக்கு கேட்கிறது.

ரேஹான் என்ற புகைப்படக்காரர் இந்த கடல்வாழ் மக்கள் வாழும் இடத்திற்கு அருகாமையில் இருந்ததால், அங்கு சென்று அவர்களுடைய நீர்நிலை வாழ்க்கையை கவனித்து புகைப்படம் மற்றும் வீடியோ காட்சியுடன் வெளி உலகிற்கு தெரியப்படுத்தினார்.

இந்த மக்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது. ஆனால், வீட்டிற்கு செல்பவர்களை வரவேற்கிறார்கள். ஆனால், அதை ஏற்க நமக்கு அந்த குடிலின் வசதி இடம் கொடுக்காது.
அவர்களுக்கு நேரத்தை பற்றிய பெரிதாக கருத்து இல்லை. ஆனால், இசை ரசனை இவர்களுக்கும் உண்டு.

இவர்களை எந்த அண்டை நாடுகளும் இன்னும் குடிமக்களாக அங்கீகரிக்கவில்லை. அதைப் பற்றிய கவலையும் இவர்களுக்கு இல்லை.

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்’ என்று மீனவர்கள் வாழ்க்கை பற்றிய எம்.ஜி.ஆர். படத்துக்கு கவிஞர் வாலி பாட்டு எழுதினார்.
இந்த கடல் மனிதர்களுக்கு பிறப்பு, பிழைப்பு வசிப்பு எல்லாமே தண்ணீர்மேல் உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தந்தையை நாய்க் கூண்டில் வைத்திருந்த பெண்ணுக்கு விளக்கமறியல்…!!
Next post குழந்தைகள் முன் பெற்றோர்கள் பேசக் கூடாது விஷயங்கள்…!!