பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளவில்லை என நிரூபித்த சீன நடிகை…!!
புகழ்பெற்ற சீன நடிகையான ஏஞ்சலாபேபி தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளவில்லை என்பதை மருத்துவ பரிசோதனை மூலமாக நிரூபித்தார்.
ரூய்லி என்கிற பீஜிங் நகர அழகு மையம் ஏஞ்சலாபேபியின் பிளாஸ்டிக் சர்ஜரி தோற்றுப்போனது என அவரை விமர்சித்து செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனால் கோபமடைந்த ஏஞ்சலாபேபி அந்த மையத்துக்கு எதிராக ஐந்து லட்சம் யுவான் கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஏஞ்சலாபேபி கடந்த மே மாதம் வெற்றியும் அடைந்தார். எனினும், அந்த அழகு மையம் வழக்கை மேல் முறையீடு செய்தது. இதனால், நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த வாரம் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொண்டார். இதன்மூலம் ஏஞ்சலாபேபி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளவில்லை என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 8-ம் தேதி சீன நடிகரான ஹுவாங் க்ஸியோமிங் என்பவரை ஏஞ்சலாபேபி 50 மில்லியன் டாலர் செலவில் சீனாவே அசந்துபோகும் விதமாக திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating