384 நாட்களாக விண்வெளியில் வாழ்ந்து சாதனை படைத்த முதல் அமெரிக்கர்…!!

Read Time:1 Minute, 45 Second

bf56a348-9ab3-4f6c-b3e8-da7cdbce7e7d_S_secvpf384 நாட்களைக் கடந்து அதிகபட்ச நாட்களை விண்வெளியில் வாழ்ந்துவரும் முதல் அமெரிக்க விண்வெளி வீரரைப் பற்றி அமெரிக்க விண்வெளி மையமான நாசா, பெருமிதத்துடன் செய்தி வெளியிட்டது.

அமெரிக்காவின் ஸ்காட் கெல்லி (51) விண்வெளியில் அதிக நாட்கள் வாழ்ந்துவரும் வீரர் என நாசா அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையோடு இவர் முன்னூற்று எண்பத்து மூன்று நாட்களை விண்வெளியில் கழித்துள்ளார். இதற்கு முன்னர், முன்னூற்று எண்பத்து இரண்டு நாட்களை கழித்த மைக் பின்கே என்கிற விண்வெளி வீரரின் சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

நான்குமுறை விண்வெளிக்கு சென்றுள்ள ஸ்காட் இந்த நான்கு முறைக்கும் சேர்த்து 384 நாட்களை தற்போது கடந்துள்ளார். வரும் அக்டோபர் 29-ம் தேதி தொடர்ந்து இருநூற்று பதினாறு நாட்கள் தொடர்ச்சியாக விண்வெளியில் தங்கியவர் என்கிற சாதனையையும் இவர் படைப்பார்.

ஸ்காட் கெல்லி 2016-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி பூமிக்கு திரும்ப இருக்கிறார். ஆகவே, இவர் மொத்தமாக 522 நாட்கள் தங்கி புதிய சாதனை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளவில்லை என நிரூபித்த சீன நடிகை…!!
Next post மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு: 70 பேர் கைது…!!