நீர்மூழ்கி இலங்கைக்கு வரலாம் – பிரமதர்…!!

Read Time:2 Minute, 12 Second

1114நட்பு ரீதியாக இலங்கைக்கு வருகை தரும் சீன நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்படாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும், அப்படியான கப்பல்கள் இலங்கை கடற்பிராந்தியத்தினுள் அடிக்கடி வருவதற்கான அனுமதி குறித்து ஆராயப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட கடற்படை கப்பல்கள் இலங்கைக்கு வருவது குறித்து விசேட நடைமுறை ஒன்றை அமுல் படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அப்படியான வெளிநாட்டு வெளிநாட்டு கடற்படை கப்பல்களின் வருகைகள் குறித்த விபரங்கள் அயல்நாடுகளுக்கு வழங்கப்படும் எனவும் பிரதமர் சிங்கப்பூர் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.

கடந்த முறை சீன நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு வருகை தந்த போது, அந்த விஜயம் குறித்த தகவல்கள் அயல்நாடான இந்தியாவிற்கு வழங்கப்படவில்லை.

ஏடன் குடாவில் நங்கூரமிடப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் இலங்கையின் ஊடாக சென்றதற்கு இந்தியா தமது எதிர்ப்பினை பதிவு செய்திருந்தது.

இந்தியாவினால் வெளியிடப்பட்ட முறைப்பாடு நியாயமானது என்பதனை இலங்கை உணர்வதாக கூறிய பிரதமர், வெளிநாட்டு கடற்படை கப்பல்களின் வருகை குறித்து அயல்நாடுகளுக்கு அறிவிக்கும் செயல்பாடுகளின் ஊடாக இப்படியான கருத்து முரண்பாடுகள் எதிர்காலங்களில் ஏற்படாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமி பலாத்கார வழக்கில் தாத்தா, பாட்டி உடந்தை? தேடுதல் வேட்டையில் பொலிசார்…!!
Next post பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளவில்லை என நிரூபித்த சீன நடிகை…!!