By 20 October 2015 0 Comments

போதையில் தள்ளாடியபடி தாலி கட்டிய மணமகனுடன் சேர்ந்து வாழ மறுத்த மணமகள்..!!

article-0-0B5650EE00000578-732_233x304தேனி அருகே உள்ள போடி புதூரை சேர்ந்தவர் முருகன். அவரது மகள் சவுந்தர்யா (வயது 20). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி (34) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று காலை வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் நடைபெற்றது.

அப்போது மணமகள் சவுந்தர்யா திருமண கனவுகளோடு மணமகளுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்து இருந்தார். முதலில் மணமேடையில் மணமகன் செல்லப்பாண்டியன் உட்கார்ந்து இருந்தார். அப்போது அவர் மது அருந்தி இருந்தார்.

சிறிது நேரத்தில் மணமகள் சவுந்தர்யா மணமேடையில் உட்கார வைக்கப்பட்டார். நல்ல நேரம் வந்ததும் மணமகன் செல்லப்பாண்டி மணமகள் சவுந்தர்யா கழுத்தில் தாலி கட்டினார். அப்போது அவர் குடிபோதையில் தள்ளாடியபடி தாலி கட்டியதால் சவுந்தர்யா அதிர்ச்சி அடைந்தார்.

அதோடு நான் செல்லப்பாண்டியோடு வாழ முடியாது. என்னை இப்படியே விட்டு விடுங்கள் என்று தேம்பி தேம்பி அழுதார். இதனை அறிந்ததும் மாப்பிள்ளை வீட்டார் மற்றும் திருமணத்துக்கு வந்திருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

உறவினர்கள் எவ்வளவோ சமரசம் செய்தும் மணமகள் சவுந்தர்யா அதற்கு உடன்படவில்லை. மணமகளின் செயலை பார்த்த மணமகன் செல்லப்பாண்டியன் தனது கழுத்தில் கிடந்த மாலையை கழட்டி ஆவேசத்துடன் வீசினார். இதனால் மணவீட்டார்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கு உள்ளவர்கள் சமரசம் செய்தனர்.

ஆனாலும் சவுந்தர்யா குடிகார மாப்பிள்ளைக்கு வாழ்கைப்படமாட்டேன் என கூறினார். நேரம் ஆக நிலைமை மோசமானது. உடனே மணக்கோலத்துடன் சவுந்தர்யா தனது தாயார் சித்ரா உதவியுடன் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷிடம் புகார் செய்தார்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்துமாறு போடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணிக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Post a Comment

Protected by WP Anti Spam