சதி­வ­லையில் சிக்­கிய, தமி­ழரின் போராட்டம் –சத்ரியன் (கட்டுரை)…!!

Read Time:15 Minute, 51 Second

timthumbபாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்கத்தின் படு­கொலை தொடர்­பாக, அண்­மையில் பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா என்று அழைக்­கப்­பட்ட இருவர் மட்­டக்­க­ளப்பில் வைத்துக் கைது செய்­யப்­பட்ட போது, அவர்­களை முன்னாள் விடு­தலைப் புலிகள் இயக்க உறுப்­பி­னர்கள் என்றே பொலிஸ் தரப்பு அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.
அது­போ­லவே, சிங்­கள, ஆங்­கில ஊட­கங்­களும், அவர்­களை முன்னாள் விடு­தலைப் புலி­க­ளா­கவே அடை­யா­ளப்­ப­டுத்தி செய்­தி­களை வெளி­யிட்­டன.

ஆனால், பிரதீப் மாஸ்டர், புலிகள் இயக்­கத்தில் இருந்து, கரு­ணா­வோடு பிரிந்து சென்று, தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கட்­சியின் தேசிய அமைப்­பா­ள­ராக இருந்­தவர்.

அந்தக் கட்­சியின் சார்பில் கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரா­கவும் பதவி வகித்­தவர்.

பின்னர் அங்­கி­ருந்து வெளி­யேறி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து தேர்­த­லிலும் போட்­டி­யிட்­டவர்.

அவை­யெல்லாம் மறைக்­கப்­பட்டு, விடு­தலைப் புலி­களின் முன்னாள் உறுப்­பினர் என்ற அடை­யா­ளமே பெரி­து­ப­டுத்­தப்­பட்­டது.

ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட கடத்­தப்­பட்டு காணா­மற்­போகச் செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பாக, வவு­னி­யாவில் இரண்டு பேர் கைது செய்­யப்­பட்ட போதும், முன்னாள் விடுதலைப் புலிகள் என்றே பொலிஸ் தரப்பும் அடை­யா­ளப்­ப­டுத்­தி­யது, சிங்­கள, ஆங்­கில ஊட­கங்­களும் செய்­தி­களை வெளி­யிட்­டன.

ரவிராஜ்

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவிராஜ் படு­கொலை தொடர்­பாக தேடப்­படும் முக்­கிய சந்­தேக நப­ரான- தற்­போது சுவிஸில் இருக்கும் சேரனும் கூட, முன்னாள் விடு­தலைப் புலி என்றே அடையா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கிறார்.

இந்த மூன்று படு­கொ­லைகள் தொடர்­பான விசா­ர­ணை­களும் இப்­போது தீவி­ர­மாக நடந்து வரு­கின்­றன. பலர் கைது செய்­யப்­பட்டும் வரு­கின்­றனர்.

இந்தச் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்று கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்கள் மீது குற்றம் நிரூ­பிக்­கப்­ப­டலாம், அல்­லது குற்­ற­வா­ளிகள் அல்ல என்று விடு­விக்­கப்­ப­டவும் கூடும். அது­வல்ல விவ­காரம்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்கத்தின் கொலை தொடர்­பாக, கடந்­த­வாரம் பிள்­ளையான் எனப்­படும் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

அவர் கிழக்கின் முன்னாள் முத­ல­மைச்சர். அவர் கைது செய்­யப்­பட்ட போது, சர்­வ­தேச ஊட­கங்­களும், இந்­திய ஊட­கங்­களும், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு நெருக்­க­மா­னவர் என்றே குறிப்­பிட்­டன.

முன்­னைய அர­சாங்­கத்தின் காலத்தில், சட்­டத்­துக்குப் புறம்­பான செயல்­க­ளுக்கு, தமிழர் தரப்பில் இருந்தே ஆட்கள் தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றனர் என்­பது தான் முக்­கி­ய­மான விடயம்.

இது அர­சாங்­கத்­தினால் நன்கு திட்­ட­மிட்டு அரங்­கேற்­றப்­பட்ட ஒரு தந்­தி­ர­மான சூழ்ச்சி.

2004ஆம் ஆண்டு, விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் ஏற்­பட்ட பிளவை அப்­போ­தைய அர­சாங்­கங்கள், எந்­த­ள­வுக்குத் தமக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்­டன என்­பதை இதி­லி­ருந்தே புரிந்து கொள்­ளலாம்.

விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் முக்­கிய பொறுப்பை வகித்த கருணா எனப்­படும் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன், தனி­யாகப் பிரிந்து சென்ற போது, அர­சாங்­கமும், இரா­ணு­வமும் தமக்குச் சாத­க­மாக அவரைப் பயன்­ப­டுத்திக் கொண்­டன.

இரா­ணுவ ரீதி­யாக விடு­தலைப் புலி­களை அழிப்­ப­தற்கு மட்டும் அவர்­களை அர­சாங்கம் பயன்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை, ஒரு துணை ஆயுதக் குழு­வாக- கூலிப்­ப­டை­யா­கவும் அர­சாங்கம் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது என்­பது படி­ப்ப­டி­யாக வெளிச்­சத்­துக்கு வந்து கொண்­டி­ருக்­கி­றது.

ஐ.நா. விசா­ரணை அறிக்­கை­களில் கூட, அர­சாங்­கத்­துடன் சேர்ந்து இயங்­கிய துணை ஆயு­தக்­கு­ழுக்­களின் மீறல்கள் குறித்து சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன.

கிழக்கில் கருணா குழுவின் படு­கொ­லைகள், மற்றும் மீறல்கள், சிறார் படைச்­சேர்ப்பு என்­பன குறித்து ஐ.நா. விசா­ரணை அறிக்கை குறிப்­பிட்டுக் கூறி­யி­ருக்­கி­றது.

கிழக்கில் கருணா குழு சிறு­வர்­களைப் படையில் இணைத்துக் கொண்ட போது அதனைப் படை­யினர் வேடிக்கை பார்த்­த­தா­கவும், அதன் மூலம், அர­சாங்­கமும் அதன் படை­களும் கூட சிறார் படைச் சேர்ப்­புக்கு உடந்­தை­யாக இருந்­துள்­ள­தா­கவும் ஐ.நா. விசா­ரணை அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.

இப்­போது நடக்­கின்ற விசா­ர­ணைகள், துணை ஆயு­தக்­கு­ழுக்­க­ளாக- கூலிப்­ப­டை­களாப் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களை மையப்­ப­டுத்­தியே முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாகத் தெரி­கி­றது.

கொலைகள், மீறல்கள் அல்­லது சட்­ட­வி­ரோத செயல்­க­ளுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்துக் கட்­ட­ளை­யிட்­ட­வர்­களை நோக்கி, இந்த விசா­ர­ணைகள் இன்­னமும் முன்­னெ­டுத்துச் செல்லப்படுகி­றதா? என்ற கேள்வி இருக்­கி­றது.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம், நட­ராஜா ரவிராஜ் ஆகி­யோரின் கொலைகள், விடு­தலைப் புலி­களின் பக்கம் நின்­ற­வர்கள் என்­ப­தற்­காக நிகழ்த்­தப்­பட்­ட­வை­யல்ல.

தமிழ் மக்­களின் பக்கம் நின்­றதால், அவர்­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநீ­தி­களை உல­கிற்கு எடுத்துக் கூறி­யதால் தான் அவர்­களின் உயிர்கள் பலி­யெ­டுக்­கப்­பட்­டன.

அவர்­களின் வாயை நிரந்­த­ர­மாக மூட வேண்டும் என்­ப­தற்­கா­கவே, இந்தக் கொலைகள் நிகழ்த்­தப்­பட்­டன.

பிரகீத் எக்­னெ­லி­கொ­ட
ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொ­டவும் கூட, இறு­திக்­கட்டப் போரில் இரா­ணுவம் இர­சா­யன ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்­தி­யது பற்­றிய தக­வல்­களை அறிந்­தி­ருந்த கார­ணத்­தினால் தான், கடத்­தப்­பட்டு காணா­மற்­போகச் செய்­யப்­பட்­ட­தாக அவ­ரது மனைவி சந்­தியா எக்­னெ­லி­கொட கூறி­யி­ருக்­கிறார்.

போர்க்­குற்­றங்­களை மறைப்­ப­தற்­கா­கவே அவர் காணா­மற்­போகச் செய்­யப்­பட்­டாரா என்­பதை நீதி­மன்ற விசாரணை தான் உறு­திப்­ப­டுத்த வேண்டும்.

எவ்­வா­றா­யினும், முன்­னைய அர­சாங்­கமும், இரா­ணு­வமும், விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் ஏற்­பட்ட பிளவை தமக்குச் சாத­க­மான வகையில் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன என்­பது மட்டும் உறுதியாகியிருக்கி­றது.

இந்த வரி­சையில் கரு­ணாவும், டக்ளஸ் தேவா­னந்­தாவும், கைது செய்­யப்­பட்டால் கூட ஆச்­ச­ரி­ய­மில்லை என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் கூறி­யி­ருக்­கிறார்.

அவர்கள் தொடர்­பாக, நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் குற்­றச்­சாட்­டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அவர்­களும் கைது செய்­யப்­பட்டு விசா­ரிக்­கப்­பட வேண்டும் என்றும் சுமந்திரன் வலியுறுத்­தி­யி­ருக்­கிறார்.

எனினும், பிள்­ளை­யானின் கைதுக்குப் பின்னர், கருணா அளித்­தி­ருக்­கின்ற பேட்டி ஒன்றில், தாம் எந்தக் குற்றங்க­ளையும் இழைக்­க­வில்லை என்றும் தம்மை யாராலும் கைது செய்ய முடியாது என்றும் கூறியிருக்கிறார்.

தனது பெயரைப் பயன்­ப­டுத்தி சிலர் குற்­றங்­களை இழைத்­தி­ருப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். அந்தக் கால­கட்­டங்­களில் தாம் இந்­தி­யா­வி­லேயே தங்­கி­யி­ருந்­த­தா­கவும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

எனினும், நாடா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ், படு­கொலை தொடர்­பாக, கரு­ணா­விடம் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும், மீண்டும் விசா­ர­ணைகள் நடத்­தப்­படும் என்றம் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு அதி­கா­ரிகள் தகவல் வெளி­யிட்­டி­ருக்­கின்­றனர்.

புலிகள் இயக்­கத்தில் இருந்து, பிரிந்து சென்ற பின்னர் தாம் இந்­தி­யாவில் தங்­கி­யி­ருந்­த­தாக கருணா முன்­னரும் இந்­தியத் தொலைக்­காட்சி பேட்டி ஒன்றில் கூறி­யி­ருந்தார்.

கோத்­தா­பய ராஜ­பக்­சவும், லக்ஸ்மன் ஹுலு­கல்­ல­வுமே தம்மை கொழும்­புக்கு அழைத்து வந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்­சியில் இணைத்­த­தாக அவர் அப்­போது தெரி­வித்­தி­ருந்தார்.

அதை­விட, தாம், எந்த தக­வல்­க­ளையும் இரா­ணு­வத்­துக்கு வழங்­க­வில்லை என்றும் அவர் அந்த தொலைக்காட்சிப் பேட்­டியில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஆனால், அதற்குப் பின்னர், முன்னாள் இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சேகா ஒரு பேட்­டியில், தாம் பத­வி­யேற்ற போது, கருணா கொழும்பில் தனி­யான இட­மொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தார் என்னும், அவ­ரிடம் இருந்து பிர­பா­க­ரனின் மறை­விடம் பற்­றிய தக­வல்­களை தாம் எதிர்­பார்த்­த­தா­கவும், ஆனால் அவ­ருக்கு அது தெரிந்திருக்க­வில்லை என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

தாம் புலிகள் இயக்கம் பற்­றிய தக­வல்­களை இரா­ணு­வத்­துக்கு வழங்­க­வில்லை என்று கருணா கூறி­யி­ருப்­பதை யாராலும் நம்ப முடி­யாது.

புலிகள் இயக்­கத்தின் முக்­கிய தலை­வர்­களில் ஒரு­வ­ராக இருந்த கரு­ணாவை, எந்த ஆதா­யமும் இல்­லாமல், இலங்கை அர­சாங்­கமும், இந்­தி­யாவும், பாது­காப்­பாக மறைத்து வைத்­தி­ருக்கும் என்று யாரையும் நம்­ப­வைக்க முடி­யாது.

கருணா இந்­தி­யாவில் மறைந்­தி­ருந்தார் என்­ப­தா­னது அவரை இந்­தி­யாவும் கூடப் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது என்­ப­தையே வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அதே­வேளை, கருணா கிழக்கில் இருந்து தப்பிக் கொழும்பு சென்ற போது எடுத்துச் சென்ற பிரீவ்கேஸ் முழு­வதும் புலி­களின் முகாம்கள் தொடர்­பான வரை­ப­டங்­களே இருந்­தா­கவும், அவர் அதனைத் தனக்குத் திறந்து காட்டியதா­கவும், தகவல் வெளி­யிட்­டி­ருக்­கிறார் அலி­சாஹிர் மௌலானா.

கரு­ணாவின் நண்­ப­ரான இவரே, கிழக்கில் இருந்து கொழும்­புக்கு பாது­காப்­பாக அழைத்துச் சென்­றவர்.

இவர் மூலமே, கரு­ணாவை ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் தமது பக்­கத்­துக்கு இழுத்­தது.

இதனை அலி­சாஹிர் மௌலா­னாவின் செவ்வி வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

தாம் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எந்த தக­வ­லையும் வழங்­க­வில்லை என்று கருணா கூறு­கின்ற நிலையில், எதற்­காக புலி­களின் முகாம்கள் பற்றிய வரைபடங்களுடன் தப்பிச் சென்றார் என்ற கேள்வி எழுவது இயல்பு.

எவ்வாறாயினும், புலிகள் இயக்கத்துக்குள் தோன்றிய அல்லது திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்ட பிளவை, அரசாங்கங்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது.

புலிகளை இராணுவ ரீதியாகப் பலவீனப்படுத்தி அழிப்பதற்காக மட்டுமன்றி, அரசியல் ரீதியாக தமிழர்களின் குரலை அடக்கவும், இந்தப் பிளவு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இப்போதும் கூட, இத்தகைய குற்றங்களை திட்டமிட்டு செயற்படுத்தியவர்கள் சிக்கியுள்ளதாகத் தெரியவில்லை.

இந்த விசாரணைகளின் இறுதியில், புலிகளின் முன்னாள் உறுப்பினர்களே குற்றவாளிகளாக தீர்ப்பிடப்படக் கூடும். அதனை எதிர்பார்த்தே, அரசாங்கங்கள், தந்திரமாகத் திட்டமிட்டு, செயலாற்றியிருக்கின்றன.

தமிழரின் போராட்டம், எவ்வாறு சதிகளுக்குள் சிக்கிச் சீரழிக்கப்பட்டுள்ளது என்பதை, இப்போது நடக்கின்ற விசாரணைகள் மட்டுமன்றி இனி நடக்கும் விசாரணைகளும் கூட வெளிப்படுத்தக் கூடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பட்டப்பகலில் வேனை வழிமறித்து 58 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த மர்மக் கும்பல்…!!
Next post சென்னை பெருங்குடி அருகே பறக்கும் ரெயிலில் தீ விபத்து: ஒரு பெட்டி முழுவதுமாக நாசம் – பயணிகள் பீதி…!!