மனித உரிமை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர்..!!

Read Time:1 Minute, 48 Second

Lavc52.32.0
Lavc52.32.0
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக பேராசிரியர் தீபிகா உடகம நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையின் தலைவரான பேராசிரியர் தீபிகா உடகம சர்வதேச மனித உரிமைகள் சட்டம் தொடர்பில் கற்கையையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் லயனல் பெனாண்டோ, சாலிய பீரிஸ், கஸ்ஸாலி ஹுஸைன், அம்பிகா சற்குணநாதன் ஆகியோர் அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

19வது அரசியல் அமைப்பு திருத்தத்தின் கீழ் அரசியலமைப்பு சபையினால் நிர்வகிக்கப்படும் சுயாதீன ஆணைக்குழுக்களில் ஒன்றான இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தேர்தல்கள், பொதுச் சேவை, பொலிஸ், கணக்காய்வு, மனித உரிமைகள், நிதி, எல்லை வரையறை, இலஞ்சம் மற்றும் ஊழல், தேசிய கொள்வனவு ஆகிய 09 ஆணைக்குழுக்களும் 10 பேரை உள்ளடக்கிய அரசியல் அமைப்பு சபையினால் உருவாக்கப்பட்டு (பெயரிடப்பட்டு) நிர்வகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றில் பெரும்பாலன ஆணைக்குழுக்களுக்கான பிரதிநிதிகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தம்புள்ளைப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று பூமிக்குள் புதையுண்டு போன சம்பவம்..!!
Next post யாழில் வெடி பொருட்கள் மீட்பு..!!