ஸ்டவ் வெடித்து இளம் பெண் பலி
சமையல் செய்ய ஸ்டவ் பற்ற வைத்த போது எதிர்பாராத விதமாக ஸ்டவ் வெடித்து இளம் பெண் பலியானார். கடம்பத்தூர் அருகே வெண்மணம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அமீர்பாஷா. இவரது மனைவி ஜீனத் (வயது 29). இவர் வீட்டில் சமையல் செய்ய ஸ்டவ் பற்ற வைத்த போது ஸ்டவ் வெடித்து சேலையில் தீப்பிடித்தது. ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினார்கள்.