இணையத்தி்ல் Yahoo, Hotmail, AOL போன்ற தளங்களில் மின்னஞ்சல்கள் வைத்திருக்கும் நண்பர்கள் அவதானம்!!

Read Time:2 Minute, 26 Second

anicomputer3.gifமைக்கிரோசாப்ட் நிறுவனத்தினரிடமிருந்தும், நோட்ரான் நிறுவனத்திடரிடமிருந்தும் நேரடி மின்னஞ்சல்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பிலான மின்னஞ்சல்களை திறக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் வந்ததாக அறியப்பட்டுகின்றது. இதில் எந்தளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. எனினும் தற்கால நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எச்சரிக்கையாக இருப்பதில் தவறில்லை என்றே தோன்றுகின்றது. உங்களுக்கு (Power Point presentation) ‘Life is beautiful.’ என்ற தலைப்பில் ஏதாவது ஒரு் மின்னஞ்சல் வந்தால் தயவு செய்து எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் திறக்க வேண்டாம். உடனேயே அதை அழித்து விடவும். அல்லாமல் இந்த மடல் தாங்கிவரும் இணைப்பை நீங்கள் திறப்பீர்களானால் உடனடியாக உங்கள் கணனியின் திரையில் பின் வரும் செய்தி வருகிறதாம்.‘It is too late now, your life is no longer beautiful.’ அந்தக் கணமே உங்கள் கணனி செயல்பாடற்றுப் போய்விடுவதுடன், உங்களுக்கு அம் மடலை அனுப்பிய கயவர்களால் உங்கள் கணனியை அவர்கள் இருந்த இடத்திலிருந்து இயக்கவும், உஙக்ளுடைய கடவுச் சொற்களைக் கைப்பற்றவும் முடியும்.
இது ஒரு வகையான புதிய வைரஸ் சென்ற சனிக்கிழமை மதியத்திலிருந்து இணையத்தில் உலாவத் தொடங்கியுள்ளதாகத் தெரிகின்றது. AOL நிறுவனத்தினர் ஏற்கனவே இச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இந்த வைரஸுக்கு மாற்று செயல் முறை எதுவும் தற்போதைக்கு கைவசம் இல்லையெனறும் சொல்கிறார்கள். இந்த வைரசை உருவாக்கிய கயவன் தன்னை ‘life owner.’ மடல்களில் குறிப்பிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. உங்கள் நண்பர்களையும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நந்திகிராமில் கம்யூனிஸ்டுகள் அட்டூழியம்: பெற்றோர் கண் எதிரில் சிறுமிகளை கற்பழித்தனர்- அகதிகளாக வெளியேறிய கொடுமை
Next post ஈபிடிபி செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் அவர்களின் கருத்து..