சென்னை நகரின் பல்வேறு இடங் களில் 705 பேர் கைது

Read Time:2 Minute, 53 Second

சென்னை நகரின் பல்வேறு இடங் களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனைகளில் ரவுடிகள், பழைய குற்றவாளிகள், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் உட்பட 705 பேர் கைதானார்கள். மேலும், ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டிச் சென்ற 2674 பேர் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு அப ராதம் விதிக்கப்பட்டது. சென்னையில் வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் போலீசார் இரவு நேரத்தில் அதிரடி வாகன சோதனை நடத்துவதை வழக்க மாக கொண்டிருக்கிறார்கள். அதன்படி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் இந்த சோதனைகளில் ஈடுபட்டனர். இந்த சோதனைகளின்போது ரவுடிகள், பழைய குற்றவாளிகள், குடி போதையில் வாகனம் ஓட்டியவர்கள், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப் பிக்கப்பட்டவர்கள் என 738 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் பிடி பட்டு, அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஹெல் மெட் அணியாமல் வந்த 2401 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் தலா 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

நகரின் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கமிஷனர் நாஞ்சில் குமரன், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இணை கமிஷனர்கள் ரவி, பாலசுப்பிரமணியன், துரைராஜ் மற்றும் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் என ஆயிரத்திற்கும் மேற் பட்ட போலீசார் இந்த அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர்.

சந்தேகத்திற்கு உரிய வகையில் நடமாடிய 22 ரவுடிகள், 58 பழைய குற்றவாளிகள், 11 நீதிமன்ற பிடி யாணை பிறப்பிக்கப்பட்டவர்கள், 62 குடிபோதையில் வாகனம் ஓட்டியவர் கள், 11 அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றவர்கள் உட்பட 705 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த சோதனையின்போது ஹெல்மெட் அணியாமல் டூ வீலர் ஓட்டிச் சென்ற 2,674 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் தலா 100 ரூபாய் அபராதம் வசூலித்த பின் அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வங்காளதேசப் புயலுக்கு 10 ஆயிரம் பேர் பலியா?; நூற்றுக்கணக்கானவர்களை தேடும் பணி நீடிப்பு
Next post சொத்து தகராறில் வாலிபர் எரித்துக்கொலை