பிரியங்கா கணவரை கடத்த சதி

Read Time:3 Minute, 21 Second

காங்கிரஸ் தலைவர் சோனியா மகள் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதோராவை கடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. சோனியா மகன் ராகுல் காந்தியை தீவிரவாதிகள் கடத்த திட்டமிட்டிருந்தது சில நாட்களுக்கு முன்னர் தெரியவந்த நிலையில், பிரியங்கா கணவரை தீவிரவாதிகள் கடத்த திட்டமிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. உத்தரபிதேச மாநிலம் லக்னோ அருகே சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் ஜெய்ஷீ முகமது இயக்கத்தைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சோனியா மகனும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ராகுல் காந்தியை அவர்கள் கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. ராகுல் காந்தியை கடத்துவதற்காக பாகிஸ்தானில் அவர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தீவிரவாதிகள் ஒப்பு கொண்டனர். இந்திய சிறையில் உள்ள தீவிரவாதிகளை விடுவிக்கும் கோரிக்கையை முன்வைப்பதற்காக இந்த சதி திட்டத்தை அவர்கள் தீட்டியதாக தெரியவந்தது. இந்நிலையில் சோனியாவின் மகள் பிரியாங்காவின் கணவர் ராபர்ட் வதோராவை தீவிரவாதிகள் கடத்த சதி திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது. காலீஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கம் இந்த சதி திட்டத்தை தீட்டியதாக உளவுத்துறை சார்பில் கூறப்படுகிறது. சர்வதேச சீக்கிய இளைஞர் சம்மேளனம் என்னும் அமைப்பு இந்த திட்டத்தை தீட்டியதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது.

தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்ட போது இந்த சதி திட்டம் பற்றிய விவரங்கள் தெரியவந்தது. காலீஸ்தான் தீவிரவாதி ஜார்நைல்சிங் மருமகன் லக்பீர் சிங் என்பவர் இந்த இயக்கத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவர் கனடாவில் இருந்து இந்த இயக்கத்தை நடத்தி வருகிறார். பிரியங்கா கணவரை கடத்தும் திட்டத்தோடு தீவிரவாதிகள் சிலரை இவர் இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

ராகுல் கடத்தல் சதி திட்டம் அம்பலமான நிலையில், இந்த சதி திட்டம் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிரியங்கா கணவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. அவருக்கு ஏற்கனவே சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாக்., முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரிக்கு சுதந்திரத்திற்கான பதக்கம்
Next post மயக்க பிஸ்கட் கும்பல் கைவரிசை