மரணத்தை அனுபவித்து பாருங்கள்: தற்கொலையை தடுக்க புதிய முயற்சியில் இறங்கிய மருத்துவமனை…!!

Read Time:2 Minute, 56 Second

sucide_korea_002தென் கொரியாவை சேர்ந்த சிகிச்சை நிலையம் ஒன்று தற்கொலை எண்ணத்தால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்காக புதுமையான முயற்சியை கையாண்டுள்ளது.
உலக அளவில் மிகவும் பின் தங்கிய இடத்தில் இருந்த தென் கொரியா கடுமையான உழைப்பின் காரணமாக பொருளாதாரத்தில் 12வது இடத்துக்கும் முன்னேறியது.

எனினும் அந்நாட்டை சேர்ந்த பலரும் தற்போது மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மன அழுத்தம், பொருளாதார பிரச்சனை போன்றவைகளால் ஏராளமானோர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

அதிக அளவில் தற்கொலை நடைபெறும் நாடுகள் பட்டியலில் தென் கொரியா இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாளைக்கு 40 பேர் என்ற எண்ணிக்கையில் அங்கு தற்கொலைகள் நிகழ்கின்றன.

இந்நிலையில் அந்நாட்டின் தலைநகரான சியோலில் உள்ள Seoul Hyowon Healing Centre தற்கொலையை கட்டுப்படுத்த புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்படும். பின்னர் பாரம்பரிய உடை அணிவிக்கப்பட்டு அவர்கள் புகைப்படம் எடுக்கப்படுவர்.

அடுத்ததாக தற்கொலை செய்துகொள்ள விரும்புகிறவர்கள் தங்களது உறவினர்களுக்கு இறுதி செய்தி எழுத வேண்டும்.

இதன்மூலம் தாங்கள் இறந்ததும் அவர்கள் படும் வேதனையை தற்கொலை செய்துகொள்கிறவர்கள் அறிந்துகொள்ளக்கூடும்.

இறுதியாக சவப்பெட்டியில் வைத்து அமைதியான அறையில் அவர்களை சவப்பெட்டியில் பூட்டி விடுவர். இந்த நேரத்தில் தாங்கள் இல்லாமல் குடும்பத்தினர் படும் துன்பங்களை அவர்கள் நினைத்து பார்க்கக்கூடும்.

சில நிமிடங்களுக்கு பின்னர் அவர்களை எழுப்புவார்கள். அடுத்ததாக அவர்களுக்கு வாழ்க்கையில் எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது போன்ற ஆலோசனைகள் வழங்கப்படும்.

இதனால் அவர்களது மனம் புத்துணர்ச்சி அடைவதாகவும், மீண்டும் தற்கொலை எண்ணம் ஏற்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிலாவிற்கு சென்று வந்த ’கடிகாரம்’ ஏலம்: வரலாறு காணாத விலைக்கு வாங்கிய தொழிலதிபர்…!!
Next post புறா திருடிய சிறுவனின் மரணம்: தற்கொலை தான் எனக்கூறிய முதல்வர்…!!