பணிப்பெண்ணுடன் உல்லாசமாக இருக்க விரும்பி தகராறு செய்த போதைப்பயணி: விமானம் அவசர தரையிறக்கம்…!!

Read Time:2 Minute, 21 Second

63fdf43a-108e-44ba-a960-27b3892118df_S_secvpfஅயர்லாந்து தலைநகரான டப்ளினில் இருந்து துருக்கி நாட்டில் உள்ள இஸ்மிர் நகருக்கு சென்ற சன் எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த ஒரு பயணி, மிதமிஞ்சிய போதையில் பணிப்பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என தகராறு செய்ததால் அந்த விமானம் செர்பியா நாட்டில் உள்ள பெல்கிரேட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

நண்பர்களுடன் அந்த விமானத்தில் பயணித்த அந்த அயர்லாந்து நாட்டு வாலிபர், மிதமிஞ்சிய போதையில் ஆடைகளை எல்லாம் கழற்றிக்கொண்டு, அங்கிருந்த ஒரு விமானப் பணிப்பெண்ணுடன் பலவந்தமாக உடலுறவு கொள்ள முயன்றார். அதை தடுக்க முயன்ற இதர அலுவலர்களை அவர் முரட்டுத்தனமாக தாக்கவும் முயன்றார்.

இதையடுத்து, செர்பியா நாட்டின் தலைநகரான பெல்கிரேடில் உள்ள நிக்கோலா டெஸ்லா விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமான நிலையத்திலும் அந்த வாலிபரும், அவருடன் வந்திருந்த நண்பர்கள் குழுவும் மிகவும் அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களை அவர்கள் தாக்க முயன்றதாகவும் செர்பியா நாட்டின் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த குழுவில் வந்த ஒருபெண்ணும், மிதமிஞ்சிய போதையில், அரை நிர்வாண நிலையில் நின்றபடி விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரை உடலுறவுக்கு அழைத்து தகராறு செய்ததாகவும், பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அசைவ உணவால் பற்களுக்கு ஆபத்தா? கலர் கலரான கேசரி பிரியரா? தெரிந்துகொள்ளுங்கள்…!!
Next post இந்தோனேசியா: நடன கிளப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் கருகி பரிதாப பலி…!!