By 26 October 2015 0 Comments

பல் வலியால் வந்த நோயாளியின் மூளையை சேதப்படுத்திய மருத்துவர்: 1,00,000 டொலர் இழப்பீடு வழங்க உத்தரவு…!!

dentist_issue_002கனடா நாட்டில் பல் வலிக்கு சிகிச்சை பெற வந்த பெண் நோயாளி ஒருவரின் மூளையை தவறுதலாக சேதப்படுத்தியை மருத்துவர் 1,00,000 டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என மருத்துவர்கள் விசாரணை குழு உத்தரவிட்டுள்ளது.
பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் பல் வலியால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார்.

இதே மாகாணத்தில் உள்ள Kamloops என்ற நகரில் மருத்துவராக உள்ள போபி ரிஷிராஜ்(52) என்பவரிடம் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

பரிசோதனை செய்த ரிஷிராஜ், வலியை ஏற்படுத்தும் பல்லை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும், சிகிச்சையின்போது வலியை உணராமல் இருப்பதற்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த அந்த பெண், சிகிச்சைக்கு தயாராகியுள்ளார். முன்னதாக, இதுபோன்ற சிகிச்சைகளுக்கு மிதமான அளவில் மட்டுமே மயக்க மருந்து அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் குழு வலியுறுத்தியிருந்தது.

ஆனால், சிகிச்சைக்கு தயாராக இருந்த அந்த பெண்ணிற்கு அளவுக்கு அதிகமாக மருந்து அளித்து ஆழ்ந்த மயக்கத்திற்கு செல்லும் வகையில் மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார்.

இதன் விளைவாக, பெண்ணின் மூளை மோசமாக பாதித்து பெரும் பக்க விளைவுகளை ஏற்படுத்தியது.

2012ம் ஆண்டு நவம்பவர் மாதம் நிகழ்ந்த இந்த தவறான சிகிச்சையை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை சில தினங்களுக்கு முன்னர் College of Dental Surgeons of B.C குழுவினர் விசாரணை செய்தபோது, ரிஷிராஜ் தவறான சிகிச்சை அளித்தது நிரூபனம் ஆனது.

மருத்துவரின் பொறுப்பற்ற நடவடிக்கையை கண்டித்த மருத்துவர்கள் அவரை 3 மாதங்கள் தற்காலிகமாக மருத்தவ பணிகளை தொடர தடை செய்யப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 1,00,000 டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.



Post a Comment

Protected by WP Anti Spam