பள்ளிக்கு பேருந்தில் செல்லக்கூட பணம் இல்லாததால் விவசாயி மகள் தற்கொலை..!!

Read Time:2 Minute, 21 Second

timthumb (2)மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாணவி சுவாதி பட்டாலி. 16 வயதான சுவாதி 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளிக்கு செல்வதற்கான அவளது பஸ் பாஸ்சின் காலஅளவு முடிந்ததால் பேருந்தில் பணம் கொடுத்து செல்ல வேண்டியிருந்தது.

ஆனால் சுவாதியின் பெற்றோர்கள் பேருந்து செலவிற்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் ஒருவாரத்திற்கு மேலாக சுவாதி பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் மாணவி சுவாதி மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 14-ம் தேதி தனது தோழிகளுடன் தந்தையின் தக்காளி தோட்டத்திற்கு சென்ற மாணவி சுவாதி அங்கு இருந்த பூச்சிக் கொல்லி மருந்தினை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இறப்பதற்கு முன்னாள் மாணவி எழுதிய கடித்தத்தில், ‘‘தயது செய்து எனது தந்தையை தொந்தரவு செய்யாதீர்கள், அவர் நிச்சயம் உங்களது பணத்தை திருப்பி தருவார்” என்று வங்கி, வட்டிக்கடைக்காரர்களை கேட்டுக் கொண்டார்.

மேலும், பள்ளிக்கு பேருந்தில் செல்வதற்கு கூட வீட்டில் பணம் இல்லை என்றும் இதனால் பல நாட்கள் பள்ளிக்கு செல்லமுடியவில்லை என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இதேபோல், பெற்றோர்கள் கல்லூரியில் சேர்க்காததால், மாணவர் ஒருவர் கடந்த மாதம் மகாரஷ்டிராவில் ரயில்முன் பாய்ந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தன்னுடைய சாம்னா இதழில் செய்தி வெளியிட்டுள்ள சிவசேனா, விவசாயிகளின் சிக்கல்களை தீர்க்க ஆளும் பா.ஜ.க., கட்சி தவறிவிட்டதாக குறைகூறியிருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதன்முதலாக மழையில் நனையும் மூன்றுமாத நாய்க்குட்டியின் ஜில் அனுபவம்: வீடியோ இணைப்பு..!!
Next post பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு…!!