கண்ணிவெடிகளுக்கிடையே பூத்த காதல்: ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியிலிருந்த நகரத்தில் நடந்த முதல் திருமணம்…!!

Read Time:1 Minute, 52 Second

4674e360-9c7c-4330-ac56-cb0d177b0f31_S_secvpfஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் பிடியிலிருந்த சிரியாவின் கோபானி நகரத்தில் அமைதி திரும்ப ஆரம்பித்துள்ள இந்த வேளையில், பல மாதங்களுக்கு பிறகு அங்கு சமீபத்தில் முதல் திருமணம் நடைபெற்றது.

அய்ன் அல்-அராப் என அறியப்படும் வட சிரியாவின் துருக்கி எல்லைக்கு அருகேயுள்ள கோபானி நகரம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியிலிருந்து குர்திஷ் படையால் சமீபத்தில் மீட்கப்பட்டது. குர்திஷ் படைக்கு ஆதரவாக அமெரிக்க படை வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் இப்பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.

குண்டுவெடிப்புகளால் பாதிக்கப்பட்ட அடையாளம் இன்னும் மாறாத இப்பகுதியில் குர்திஷ் ஜோடியின் திருமணம் கடந்த அக்டோபர் 23-ம் தேதி நடைப்பெற்றது. இப்பகுதியின் தற்போதைய நிலையை தமது திருமணத்துடன் நினைவில் வைத்துக்கொள்ள விரும்பிய தம்பதி, பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

இப்பகுதியில் பல்வேறு இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ளனர். இதில் ஒரு கண்ணிவெடிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 8 குழந்தைகள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு…!!
Next post வாரக் கணக்கில் தூங்கும் கிராமவாசிகள்: மர்ம நோயின் காரணம் என்ன?