திமிங்கலத்தை பார்வையிட சென்றபோது நிகழ்ந்த விபரீதம்: பரிதாபமாக பலியான 5 பேர் (வீடியோ இணைப்பு)

Read Time:2 Minute, 37 Second

shark_attack_002கனடா நாட்டில் திமிங்கலத்தை பார்வையிட படகு ஒன்றில் சென்றபோது ஏற்பட்ட திடீர் விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள வான்கூவர் தீவுக்கடலில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டோபினோ நகருக்கு மேற்கில் அமைந்துள்ள இந்த தீவுக்கடலில் உலாவரும் திமிங்கலத்தை பார்க்க நூற்றுக்கணக்கானவர்கள் படகுகளில் பயணம் மேற்கொள்வது வழக்கம்.

இதுபோன்று ஒரு பயணம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நேற்று பிற்பகல் வேளையில், Leviathan II என்ற படகில் 27 பேர் புறப்பட்டுள்ளனர்.

கரையிலிருந்து 8 மைல் தொலைவிற்கு சென்றவுடன், திடீரென படகு கவிழ தொடங்கியுள்ளது. ஆபத்தை உணர்ந்த பயணிகள் உடனடியாக மீட்புக்குழுவினருக்கு அவசர தகவல் அளித்துள்ளனர்.

தகவல் பெற்று 30 நிமிடங்களில் ஹெலிகொப்டர் மூலம் வந்த மீட்புக்குழுவினர், கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 21 பேரை பத்திரமாக மீட்டனர்.

ஆனால், மீட்பு குழுவினர் வருவதற்கு முன்னரே 5 பேர் பலியானதாகவும், ஒரு பயணியை இதுவரை கண்டுபிடிக்கவில்லை என கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

படகு விபத்தில் பலியான 5 பேரும் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியிடப்படவில்லை. கனடா நாட்டு மீட்பு குழுவினரை சேர்ந்த மெலிசா கை என்பவர் கூறுகையில், காணாமல் போன நபரை தேடும் பணியை Royal Canadian Mounted Police துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மீட்புக்குழுவினரால் காப்பாற்றப்பட்ட நபர்களை டோபினோ நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதின் காரணம் அறியப்படாததால், இது குறித்து பொலிசார் விசாரணையை முடக்கியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாரக் கணக்கில் தூங்கும் கிராமவாசிகள்: மர்ம நோயின் காரணம் என்ன?
Next post கடத்தல்காரர்கள் நடத்திய திடீர் துப்பாக்கி சூடு: 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!