நடுவானில் பறந்த விமானத்தின் இறக்கையை தாக்கிய மின்னல்: அச்சத்தில் உறைந்த பயணிகள் (வீடியோ இணைப்பு)

Read Time:5 Minute, 26 Second

air_canada_001கனடா நாட்டை சேர்ந்த விமானம் ஒன்று நடுவானில் பறந்துக்கொண்டு இருந்தபோது விமானத்தின் இறக்கையை திடீரென மின்னல் தாக்கியதில் பயணிகள் அச்சத்தில் உறைந்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கனடா நாட்டை சேர்ந்த ஏர் கனடா 084 என்ற விமானம் கடந்த சனிக்கிழமை மாலை டொரோண்டோ நகரிலிருந்து இஸ்ரேலில் உள்ள Tel Aviv நகருக்கு புறப்பட்டுள்ளது.

விமானத்தில் 10 விமான குழுவினர்கள் உட்பட 208 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் காலநிலை மோசமாக இருந்ததால், இடி மின்னல் பலமாக தோன்றியவாறு இருந்துள்ளது.

விமானத்தை இஸ்ரேலில் தரையிறக்குவது ஆபத்தானது என்பதை உணர்ந்த விமானிகள், உடனடியாக விமானத்தை வேறு பாதையில் திருப்பி சைப்ரஸ் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினர்.

விமானம் தரையிறக்கப்பட்டதும் விமானிகள் ஆராய்ந்தபோது இரண்டு இறக்கைகளில் ஒன்று மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி சேதாரம் ஆகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விமானத்தில் பயணம் செய்த Guy Katzovich என்ற பயணி கூறியபோது, விமானம் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டதை அறிந்ததும் பயணிகள் அனைவரும் ஒரு வித அச்சத்திற்கு உள்ளாகியதாக தெரிவித்தார்.

விமானம் மாற்று இடத்தில் தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து, ஏர் கனடா வேறொரு விமானத்தை அனுப்பி பயணிகளை பத்திரமாக ஏற்றிக்கொண்டு திங்கள் கிழமை இஸ்ரேல் சென்றடைந்துள்ளது.

மின்னல் தாக்கினால் விமானத்திற்கு பாதிப்பு உண்டாகுமா?

நீங்கள் பல முறை விமானத்தில் பயணித்தவராக இருந்தால், உங்களுடைய விமானம் ஒருமுறையாவது மின்னலின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

வருடத்திற்கு சராசரியாக ஒரு முறையாவது அனைத்து விமானங்களும் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகின்றன என மின்னல் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் உறுதியாக கூறுகின்றனர்.

ஆனால், தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளால் மின்னல் தாக்குவதால் விமானத்திற்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என நிபுணர்கள் உறுதியாக கூறுகினறனர்.

கடந்த 1963ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் வானவெளியில் பறந்துக்கொண்டிருந்த போயிங் விமானம் ஒன்று மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 81 பயணிகள் கொல்லப்பட்டனர்.

இந்த விபத்திற்கு பிறகு, மின்னலிருந்து விமானத்தை பாதுகாப்பது எப்படி என்ற தீவிர ஆய்வை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

பூமியிலிருந்து 2 முதல் 5 கிலோ மீற்றர் உயரத்தில் பறக்கும் விமானத்தை மின்னல் தாக்குவதை உணர்ந்த ஆராய்ச்சியாளர்கள், விமானத்தின் அலுமினிய மேலேடுகளை மாற்றி அமைப்பதை குறித்து ஆராய்ந்தனர்.

இதன விளைவாக, மிதமான கார்பன் உலோகங்களாலும், மேற்புறம் மெலிதான காப்பரால் தயாரிக்கப்பட்ட அலுமினியங்களை விமானத்தில் பயன்படுத்தி தொடங்கியதும் மின்னல் மூலம் விமானம் தாக்குதலுக்கு உள்ளாவதை தற்போது முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.

பொதுவாக மின்னலானது விமானத்தின் முன்பகுதி, இறக்கை அல்லது வால்பகுதியை தான் தாக்கும்.

தற்போதுள்ள விமானங்களின் வடிவமானது எத்தகை மோசமான மின்னலையும் தாங்கி திருப்பி அனுப்பும் சக்தி வாய்ந்தது.

உதாரணத்திற்கு, விமானத்தின் முன்பகுதியை மின்னல் தாக்கினால், மின்னலிருந்து வெளியாகும் மின்சாரமானது அந்த வேகத்தை விட 10 மடங்கு வேகத்தில் விமானத்தை விட்டு வெளியேறிவிடும்.

விமானத்தை மின்னல் தாக்கிய உணர்வு கூட உள்ளிருக்கும் பயணிகளுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொல்கத்தா ரெயிலில் தீ விபத்து…!!
Next post A-9 வீதியின் கடுகஸ்தொட மற்றும் அம்பதென்ன வரையான பகுதி உடைந்து விழுந்துள்ளது…!!