புலமைப் பரிசில் மாணவர்கள் பாதிப்பு – கல்வி அமைச்சுக்கு எதிராக முறைப்பாடு..!!

Read Time:1 Minute, 33 Second

timthumbஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் அநியாயம் இழைக்கப்பட்ட சிறுவர்களுக்காக, கல்வி அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் தொகையை குறைத்தமையினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அந்த சட்ட நடவடிக்கைக்கும் மேலாக போராட்டத்தினை மேற்கொள்ள தயாராகவுள்ளதாக, குறித்த சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து கல்வி அமைச்சுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், இதன்முதற் கட்டமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு நாளை முறைப்பாட்டை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அதற்கு இரண்டு வாரங்களுக்குள் சாதாரண தீர்வு பெற்றுத் தராவிடின், பெற்றோருடன் இணைந்து தங்களது அமைச்சுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த வேண்டி ஏற்படலாம் என, கவலையுடன் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post A-9 வீதியின் கடுகஸ்தொட மற்றும் அம்பதென்ன வரையான பகுதி உடைந்து விழுந்துள்ளது…!!
Next post ஒஸ்ட்ரியா கொழும்புக்கிடையேயான வானுர்தி சேவைகள் ஆரம்பம்…!!