By 29 October 2015 0 Comments

விசேட ஐரோப்பிய குழு இலங்கை வருகிறது…!!

European_union_flag-6ஐரோப்பா சங்கத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடி ஏற்றுமதிக்கான தடை தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று இலங்கை வரவுள்ளது.

அடுத்த மாதம் 12 ஆம் திகதி இந்த குழு இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பொருளாதார பிரிவின் பணிப்பாளர் கிரேஸ் ஆசிர்வாதன், கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இலங்கை வரும் அந்த குழுவினர் 5 நாட்;கள் நாட்டில் தங்கியிருந்து, மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கத்தின் பொருட்டு இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயுள்ளனர்.

பின்னர் அவர்கள் ஐரோப்பிய சங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் பொருளாதார பிரிவின் பணிப்பாளர் கிரேஸ் ஆசிர்வாதன் குறிப்பிட்டார்.



Post a Comment

Protected by WP Anti Spam