அமெரிக்க சுதந்திர தேவி சிலை நிறுவப்பட்ட நாள் அக்டோபர் 29: சுவாரசியமான பின்னணி…!!

Read Time:3 Minute, 45 Second

statueof_liberty_002உலக புகழ்பெற்ற அமெரிக்க சுதந்திர தேவி சிலை நிறுவப்பட்டு இன்றுடன்(அக்டோபர், 29) 129 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சுதந்திர தேவி சிலையின் சுவாரசியமான பின்னணி வரலாற்றை தெரிந்துக்கொள்வோம்.
அமெரிக்காவை பிரித்தானிய ராஜ்ஜியம் ஆண்டு வந்த நிலையில் அந்த ராஜ்ஜியத்திலிருந்து விடுப்பட பெரும் புரட்சி ஏற்பட்டது.

இந்த புரட்சியின் விளைவாக, 1776ம் ஆண்டு யூலை 4ம் திகதி அமெரிக்கா பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது.

அமெரிக்க புரட்சி நடைபெற்ற காலத்தில் அந்நாட்டிற்கு ஒரு உற்ற நண்பனாக பிரான்ஸ் நாடு விளங்கி வந்தது.

இருநாடுகளின் நட்பை பலப்படுத்தும் நோக்கில் அமெரிக்க நாட்டிற்கு பரிசு அளிக்க பிரான்ஸ் முடிவு செய்தபோது உருவானது தான் இந்த சுதந்திர தேவி சிலை.

கீழே உள்ள படத்தில், பாரீஸில் உள்ள ஒரு பகுதியில் அமெரிக்க சுதந்திர தேவி சிலை வடிவமைக்கப்படுவதை காணலாம்.

பிரான்ஸின் சிறப்பு வாய்ந்த கலைஞரான பிரடெரிக் அகஸ்தே பர்தோல்டி என்பவரால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டது.

இவருக்கு உதவியவர், பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை வடிவமைத்த குஸ்டவ் ஈபிள்.

27.2 டன் செம்பு மற்றும் 113.4 டன் இரும்பு எடையுடன் இந்த சிலையை வடிவமைக்கும் பணி கடந்த 1875ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஆனால், பணியை துவக்கிய நாள் முதல் மழை, பனி என பல மோசமான வானிலை மாற்றங்கள் ஏற்பட்டதால், 1884ம் ஆண்டில் தான் வடிவமைக்கும் பணி நிறைவுப்பெற்றது.

சுதந்திரத்தை எடுத்துரைக்கும் ரொமானிய நாட்டின் லிபர் டாஸ் என்ற பெண் கடவுளை மையமாக வைத்து இந்த சிலை வடிவமைக்கப்பட்டது.

பின்னர், பிரான்ஸில் இருந்து கப்பல் மூலம் அனுப்பப்பட்ட சுதந்திர தேவி சிலை, அமெரிக்காவில் பெறப்பட்டு 1886ம் ஆண்டு அக்டோபர் 29ம் திகதி திறக்கப்பட்டது.

நியூயோர்க் நகரில் உள்ள ஹட்சன் தீவு துறை முகத்திற்கு அருகில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.

சிலையின் ஒரு கையில் சுடரும், மற்றொரு கையில் அமெரிக்க புரட்சி ஏற்பட்ட யூலை 4, 1776ம் பொறிக்கப்பட்ட புத்தகமும் இடம்பெற்றுள்ளது.

சிலையின் தலையில் உள்ள கிரீடத்தில் 7 முனைகளும் உலகத்தின் 7 கண்டங்கள் மற்றும் கடல்களை குறிப்பதாக அமைந்துள்ளது.

அமெரிக்கா மீதுள்ள நட்பிற்காக ஒரு நினைவு பரிசாக பிரான்ஸ் நாடு வழங்கிய இந்த சுதந்திர தேவி சிலையை கடந்த 1924ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 16 வயது மகளை ஏழு மாத கர்ப்பிணியாக்கி தந்தை…!!
Next post பெண் போல் முகமூடி அணிந்து சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்த நபர்…!!