பெண் போல் முகமூடி அணிந்து சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்த நபர்…!!

Read Time:1 Minute, 53 Second

old_men_005பிரேசிலில் பெண் போல் முகமூடி அணிந்து சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்த போதைப்பொருள் கடத்தல்காரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரேசிலை சேர்ந்தவர் க்லொடோல்டொ அண்டொனியோ ஃபெலிப் (Clodoaldo Antonio Felipe). இவர் பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் கொமண்டொ வெர்மெல்ஹொ அமைப்பை சேர்ந்தவராவார்.

பொலிசாரால் கைது செய்யப்பட்ட இவருக்கு 36 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டு Coronel Odenir Guimaraes சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஃபெலிப் வயதான பெண்மணி போன்று முகமூடி மற்றும் உடை அணிந்து சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.

சிறையினுள் கைதிகளை பார்ப்பதற்காக எந்த வயதான பார்வையாளரும் செல்லாத நிலையில் ஒரு வயதான பெண்மணி வருவதை பார்த்த சிறை அதிகாரி சந்தேகம் அடைந்துள்ளார்

இதையடுத்து பெண் காவலாளிகள் அவரை சோதனை செய்ததில் பெண் போல் வேடமிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

சிறையினுள் அவருக்கு அதி நவீன முகமூடி மற்றும் ஆடைகள் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பாக சிறை அதிகாரிகளி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க சுதந்திர தேவி சிலை நிறுவப்பட்ட நாள் அக்டோபர் 29: சுவாரசியமான பின்னணி…!!
Next post நீங்கள் மரணிக்கும் போது என்ன நடக்கிறது? (வீடியோ இணைப்பு)