மட்டக்களப்பில் சட்டவிரோத ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களையுமாறு முஸ்லிம்கள் வற்புறுத்து

Read Time:2 Minute, 5 Second

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் சட்டவிரோதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளதாக இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. கடந்த வார நிலைமைகள் தொடர்பாக கண்காணிப்புக்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; முஸ்லிம்களின் நிலைமைகள் தொடர்பாக காத்தான்குடி, ஏறாவூர் கல்குடா பிரதேச முஸ்லிம் கூட்டமைப்புகள் 7 தீர்மானங்களை கடந்த நவம்பர் 6 ஆம் திகதி நிறைவேற்றியிருந்தன. அப்பிரதேசங்களில் தொடர்ந்தும் கடத்தல் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க சட்டவிரோத ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதேபோல் இணக்கமானதொரு சூழ்நிலையில் வாழ்வதற்கு திரும்பாது போயின் எதிர்விளைவுகள் நேரிடும் என்றும் நவம்பர் 6 ஆம் திகதி முஸ்லிம் அமைப்பொன்று துண்டுப் பிரசுரம் மூலம் எச்சரித்தது. கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முஸ்லிம் ஒருவர் கடத்தப்பட்டமைக்கு அந்த துண்டுப் பிரசுரம் உரிமை கோரியது. இருப்பினும் அத்தகைய அச்சுறுத்தல்கள் தொடர்பில் எமக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை. அதேநாள் காத்தான்குடி ஏறாவூர், ஓட்டமாவடி முஸ்லிம் கிராமங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஜனவரி – 8 இல் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல்; முஷாரப் அறிவிப்பு
Next post புலிகளை ஆதரிப்பதன் மூலம் தமிழகம் வரலாற்றுத் தவறினைப் புரிந்து விடக் கூடாது! -தமிழக அரசியல்வாதிகளுக்கு ஆனந்த சங்கரி வேண்டுகோள்