தீயணைப்பு நிலையத்தில் ஊழியர் மர்மமான முறையில் பலி; வாட்ஸ்அப்பில் வெளியான காணொளியால் பரபரப்பு…!!

Read Time:3 Minute, 23 Second

0cc97e2e-253d-47ee-9515-58400f062d33_S_secvpfதிருவண்ணாமலையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). திருவண்ணாமலை தீயணைப்பு துறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 9–ந்தேதி திருவண்ணாமலை தீயணைப்பு துறை அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஊழியர்கள் மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார்.

இந்நிலையில் மணிகண்டன் திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் உள்ள தீயணைப்பு துறைக்கு மாற்றப்பட்டார்.

நேற்று இரவு தீயணைப்பு நிலையத்தில் பணியில் இருந்த போது மணிகண்டன் திடீர் என மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக சோழிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார்.

அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. பணிச்சுமை காரணமாக இறந்தாரா? அல்லது வேறு காரணமா என்று பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே மணிகண்டன் பேசும் வீடியோ வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. அவர் இதனை நண்பர்களுக்கு அனுப்பியதாக தெரிகிறது. அதில் உயர் அதிகாரிகளின் நெருக்கடி குறித்து பேசி இருக்கிறார்.

இதனால், உறவினர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதிகாரிகள் நெருக்கடியால் மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஆனால் போலீசார் இதனை மறுத்துள்ளனர். மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்ததாக தெரிகிறது.

மணிகண்டனின் தந்தை பசுவையா திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்தில் டிரைவராக பணியில் இருந்த போது மரணம் அடைந்தார்.

இதையடுத்து மணிகண்டனுக்கு வாரிசு வேலை கிடைத்து உள்ளது. அவர் பணியில் இருந்த போது உயர்அதிகாரி ஒருவர் நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால் மணிகண்டன் கடந்த 9–ந்தேதி தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து அந்த தீயணைப்பு நிலையத்தில் வேலை பார்த்த மணிகண்டன், உயர் அதிகாரி உள்பட 10 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

மணிகண்டனுக்கு விரைவில் திருமணம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் இதுவும் தடைப்பட்டதாக தெரிகிறது. இதற்கு நெருக்கடி கொடுத்த அதிகாரியே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: வீட்டு உரிமையாளர் மகன் கைது..!!
Next post பெண் குழந்தையை வாஷிங்மெஷினுக்குள் மறைத்து வைத்திருந்த தாய்: காரணம் என்ன? (வீடியோ இணைப்பு)…!!