பிறப்புறுப்பு மாற்று ஆபரேஷன் மூலம் முழுப் பெண்ணாக மாறிப்போன மகனை ஆண்கள் சிறையில் அடைத்ததால் தவிக்கும் தாய்…!!

Read Time:2 Minute, 56 Second

4a27bcdf-068f-4860-9d9c-fea137923fad_S_secvpfஅமெரிக்காவின் மாஸாச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள சோமெர்செட் நகரைச் சேர்ந்தவர் ஜாக்கி புரூக்ளின். இவரது மகன் ஆரோன், வளரவளர குரோமோசோம்களின் குளறுபடியால் தனது உடலில் பெண்மைக்குண்டான அடையாளங்கள் தோன்றத் தொடங்கியதாக உணர்ந்தார்.

அடுத்தடுத்து, ஆறு பிறப்புறுப்பு மாற்று ஆபரேஷன்களின் மூலம் முற்றும்முழுக்க பெண்ணாக மாறிப்போய் தாரா ஹட்சன்(26) என்ற பெயரில், அசப்பில் பார்க்க பிரபல ஹாலிவுட் கதாநாயகி பியான்ஸே-வைப் போலவே தோற்றமளிக்கும் இவர், ஒப்பனைக் கலைப்பயிற்சி முடித்து, பகுதிநேரமாக சிலரிடம் பணியாற்றி வந்தார்.

கடந்த ஆண்டு தனது வீட்டின் அருகேயுள்ள ஒரு பாரில் அடிதடி, கலாட்டாவில் ஈடுபட்டதாக போலீசாரால் தாரா ஹட்சன் கைது செய்யப்பட்டார். இவர்மீது சோமெர்செட்டில் உள்ள பாத் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த நீதிபதி அவரை 12 வாரங்கள் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.

தற்போது, பெண்ணாக மாறிவிட்ட தாரா ஹட்சனை பெண்களுக்கான தனிச்சிறையில்தான் அடைக்க வேண்டும் என டாக்டர்களின் சான்றிதழ்களை சமர்ப்பித்து அவரது வக்கீல் கேட்டுக்கொண்டார். அதை மறுத்துவிட்ட நீதிபதி, முக்கிய ஆவணமான குற்றவாளியின் பாஸ்போர்ட்டை ஆதாரமாகவைத்து, அதில் ஆண் பெயரான ஆரோன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் ஆண்கள் சிறையில்தான் அடைக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

மிகக்கொடூரமான குற்றங்களை செய்த பயங்கர குற்றவாளிகளை அடைத்துவைக்கும் பிரிஸ்டல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் அழகிய பெண்ணின் தோற்றத்தில் இருப்பதால் சிறைக்குள் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார் என கலக்கம் அடைந்திருக்கும், தாராவின் தாய் ஜாக்கி புரூக்ளின், அவரை பெண்கள் சிறைக்கு மாற்றுவது எப்படி? என்ற வழி தெரியாமல் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செல்ல நாய்களுடன் போட்டிபோட்டு ஊளையிடும் ஐந்து மாதக் குழந்தை: சிரிப்பு மூட்டும் வீடியோ இணைப்பு…!!
Next post சாலையில் தாறுமாறாக ஓடி வீட்டின் கூரையில் ஏறிய கார்…!!