உடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்: விநோத நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி…!!

Read Time:2 Minute, 14 Second

open_heart_002-615x768ரஷ்யாவை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவரின் இதயம் உடலுக்கு வெளிய துடிக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த 6 வயது சிறுமியான விர்சவியா போரென்(Virsaviya Borun) என்பவர் Pentalogy of Cantrell என்ற விநோத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக அவரது இதயம் மற்றும் குடல் ஆகியவை உடலில் உள்ளே இல்லாமல் வெளியே தெரியும்படி அமைந்துள்ளது.

10 லட்சம் பேரில் 5.5 சதவீதத்தினருக்கு மட்டுமே ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ள இந்த நோயினால் அவரது இதயம் மற்றும் குடல் ஆகிய இரண்டுமே மெல்லிய தோலினால் மூடியவாறு வெளிப்படையாக தெரியும் விதத்தில் அமைந்துள்ளது.
இதை குணப்படுத்துவதற்காக விர்சவியா மற்றும் அவரது தாயார் டெரி போரென் ஆகியோர் தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ளனர்.

விர்சவியாவை சோதித்த மருத்துவர்கள் அவர் உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது சிகிச்சை செய்ய முடியாது எனவும் இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து அவரை மீண்டும் பரிசோதித்து விட்டுதான் சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

எனவே தற்போது இருவரும் அமெரிக்காவில் உள்ள ப்லோரிடாவில் வசித்து வருகின்றனர்.

மேலும் விர்சவியாவின் சிகிச்சைக்காக பணத்தை சேகரிப்பதற்காக அவரது குடும்பத்தினர் Youcaring.com என்ற இணையப்பக்கத்தையும் உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாக குறுகிய காலத்திலேயே 11,790 டொலர் நிதி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ருகுணு குமாரியில் மோதி இளைஞர் பலி..!!
Next post அநுராதபுரம் விடுதி உரிமையாளர் கொலை: 27 சந்தேகநபர்கள் கைது…!!