புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற 25 சிங்கள இளைஞர்கள் இதுவரை கைது

Read Time:3 Minute, 54 Second

தமிழ் இளைஞர்களைப் பயன்படுத்தி தெற்கில் ஊடுருவுவதும் தாக்குதல்களை நடத்துவதும் இயலாத காரியமாக வரும் நிலையில் சிங்கள இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்கி அவர்களின் உதவியுடன் தெற்கில் தாக்குதல்களை நடத்தப் புலிகள் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படும் தகவல்களின் அடிப்படையில் அவைசம்பந்தப்பட்ட தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவ்வாறு புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதான பிரதேசமாகிய கிளிநொச்சியில் வைத்து ஆயுதப் பயிற்சியளிக்கப்பட்ட சிங்கள இளைஞர்களின் ஆதரவுடன் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் குழுவொன்று அண்மையில் வன்னியிலிருந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுவதாகவும் இவ்வாறு அவர்கள் வன்னியிலிருந்து தெற்குப் பிரதேசங்களுக்கு நுழைந்துள்ளனரா என்பது பற்றி வவுனியா மற்றும் பிரதேசப் பொலிஸ் தரப்பில் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்துறை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மையில் இந்த வகையில் கிளிநொச்சியிலுள்ள குறிப்பிட்ட புலிகள் இயக்க முகாம்களில் ஆயுதப் பயிற்சியும் வெடிகுண்டு தயாரிப்பு மற்றும் தாக்குதல் பயிற்சிகளும் வழங்கப்பட்ட சிங்கள இளைஞருடன் புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் தரத்திலுள்ள இரண்டு புலிகள் இயக்க உறுப்பினர்கள் தெற்கு நோக்கி வந்துள்ளதாகவும் இவர்களைக் கைது செய்வதற்காக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை நடத்தி வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குறிப்பிட்ட புலிகள் இயக்க முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்ற சிங்கள இளைஞர் பற்றி இதுவரை தெரிய வந்துள்ள தகவல்களுக்கேற்ப அவர் காலியில் கினந்தும் பிரதேசத்தில் வசிக்கும் அவ்வூர்வாசி எனவும் அவர் தற்போது தனது பிரதேசத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி பொலிஸ் புலனாய்வுப் பிரிவு தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களில், இவ்வாறு புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுடன் சேர்ந்து அவர்களின் முகாம்களில் ஆயுதப் பயிற்சிகள் பெற்ற சிங்கள இளைஞர்களில் 25 பேர் இதுவரையில் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை நாடெங்குமுள்ள பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் கைது செய்துள்ளதாகவும் இவர்கள் அனைவரும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் மேலும் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸ் பிரிவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post போதையில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்; சென்னை நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவில் அழகிகள் ஆபாச நடனம்: போலீஸ் வேட்டையில் 80 பேர் சிக்கினார்கள்
Next post உக்ரேன் நாட்டில் சுரங்கம் இடிந்து விழுந்து 100 தொழிலாளர்கள் பலி