பெண்களை ரகசியமாக படம் பிடித்து ரசித்த நபர்: சரியான பதிலடி தந்த பெண்மணி (வீடியோ இணைப்பு)…!!

Read Time:2 Minute, 17 Second

boston_002அமெரிக்காவில் பெண்களை ரகசியமாக படம் பிடித்து ரசித்த நபருக்கு பெண் ஒருவர் அளித்த தண்டனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள நியூபெரி சாலையில் ஜேஸ் தில்லான் (Jase Dillan) என்ற பெண்மணி நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது ஒரு நபர் தனது கைப்பேசி மூலமாக ஜேஸை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அவரது உடல் பாகங்களை ஜூம் செய்து பார்த்து ரசித்துள்ளார்.

இதையறிந்த ஜேஸ் அவரை பின் தொடர்ந்துள்ளார். அப்போது மேலும் சில பெண்களையும் இரண்டு சிறுமிகளையும் அவர் வீடியோ எடுத்து ரசித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து ஜேஸ் பொலிசுக்கு தகவல் அளித்தார். பின்னர் அந்த நபர் தப்பித்து செல்லாமல் இருப்பதற்காக ஜேஸ் அவரை தனது கைப்பேசியில் வீடியோ எடுத்தவாறே பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

இதை கவனித்த அந்நபர் , எதற்காக என்னை வீடியோ எடுக்கிறாய் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

உடனே ஜேஸ் அவரிடம், நீ மட்டும் பெண்களின் உடல் அங்கங்களை ரகசியமாக வீடியோ எடுக்கும் போது நான் உனது முகத்தை வீடியோ எடுக்கக்கூடாதா என்று கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்நபர் தப்பித்து செல்வதற்காக வேகமாக நடந்து செல்கிறார். எனினும் ஜேஸ் அவரை விடாமல் பின் தொடர்ந்து வீடியோ எடுத்துள்ளார்.

மேலும் அவரை கண்டுபிடிப்பதற்காக இந்த வீடியோவை சமூகவலைதளத்திலும் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 5,70,000 பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்பத்தூரில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்…!!
Next post உலகிலேயே அதிகளவில் பேய்களால் சூழ்ந்த விசித்திர தீவு…!!