கொடூரமாக கொலைசெய்யப்பட்ட மக்கள்: திகிலூட்டும் காட்சிகள்…!!

Read Time:2 Minute, 25 Second

russia_museum_003ஸ்டாலின் காலத்தில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களை உலகுக்கு காட்டும் விதமாக மாஸ்கோவில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
சோவியத் ஒன்றியத்தில் “குலக் முகாம்களில்” அடைத்துவைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட பலட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அரசே உருவாக்கியிருக்கும் இந்த அருங்காட்சியகம், சோவியத் சர்வாதிகாரி, ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக்காலத்தில், குறிப்பாக, 1930லிருந்து 1950 வரையிலான காலகட்டத்தில், கொல்லப்பட்டவர்களை நினைவூட்ட தேசிய மட்டத்தில் அனுசரிக்கப்பட்ட நினைவு தினத்தையொட்டி திறக்கப்பட்டிருக்கிறது.

மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட குழிகளுக்குள்ளிருந்து குரூரமான விடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

கொலை செய்யப்பட்டவர்களைக் கட்டிவைக்கப் பயன்படுத்தப்பட்ட வயர்கள், துப்பாக்கி குண்டுகள், குண்டுகளை வைக்கப் பயன்படுத்தப்பட்ட உறைகள் போன்றவை இதில் அடங்கும்.
ஸ்டாலின் பயங்கரவாத ஆட்சியில் சுமார் 2 கோடி பேர் வரை கொல்லப்பட்டனர்.

1930களில் சோவியத் ஆட்சிக்கு எதிராக சதி செய்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், ஒட்டு மொத்தமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

அருங்காட்சியகத்துக்குள் நுழையும் பார்வையாளர்கள், சிறைக் கதவுகள் திறந்து மூடும் கொடூரமான திகிலூட்டும் ஒலியையும், சிறைக் கூடத்தில் கேட்கும் பலத்த காலடி ஓசைகளையும் கேட்க முடிகிறது.

ரஷ்யாவில் பல்வேறு இடங்களில் இருந்த இந்த அட்டூழிய முகாம்களைக் காட்டும் ரஷ்ய வரைபடம் ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகிலேயே அதிகளவில் பேய்களால் சூழ்ந்த விசித்திர தீவு…!!
Next post கீதாவுக்கு உரிமை கொண்டாடும் 5 குடும்பத்தினர்: யார் மகள்? என்பதை அறிய டி.என்.ஏ. பரிசோதனை…!!