கீதாவுக்கு உரிமை கொண்டாடும் 5 குடும்பத்தினர்: யார் மகள்? என்பதை அறிய டி.என்.ஏ. பரிசோதனை…!!

Read Time:2 Minute, 29 Second

3ed16275-cc67-4db8-9c26-c8a5afd1f08d_S_secvpfஇந்தியாவை சேர்ந்த கீதா 8 வயது இருக்கும் போது வழிதவறி பாகிஸ்தான் சென்றுவிட்டார். வாய் பேச முடியாத, காது கேளாத அவர் 15 ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்தார்.

இந்த நிலையில் பீகாரில் வசிக்கும் தனது பெற்றோரை அடையாளம் கண்ட பிறகு கடந்த திங்கட்கிழமை கீதா நாடு திரும்பினார்.

விமான நிலையத்தில் அவரை வரவேற்க காத்து இருந்த அவரின் குடும்பத்தாரை அவரால் அடையாளம் காண முடியவில்லை. இதனால் அவர்களை சந்திக்காமலேயே சென்று விட்டார்.

பீகாரை தொடர்ந்து உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த தம்பதியினர் கீதா தங்களது மகள் என்று உரிமை கொண்டாடி உள்ளனர்.

இந்த நிலையில் 5–வதாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தம்பதி கீதா தங்களது மகள்தான் என்று உரிமை கோரியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் சைமா குர்தத் கிராமத்தை சேர்ந்தவர் முகமதுகான் இவரது மனைவி ஹமிதி. இவர்கள் கீதா தங்களது மகள் என்று கூறியுள்ளனர்.

கீதா பற்றிய புகைப்படங்கள் பத்திரிகையில் வெளியாகி இருந்தது. இந்த புகைப்படத்தை அந்த தம்பதியினர் படத்தில் இருக்கும் கீதா தங்களது மகள் என்று மாவட்ட நிர்வாகத்தை அனுகி உரிமை கோரியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும் போது வாய் பேச முடியாத, காது கேளாத தங்களது மகள் ஹன்சிரா 8 வயதாக இருக்கும் போது 2003–ல் காணாமல் போனார். கீதாவின் முகச்சாயலில் காணாமல் போன எனது மகளோடு ஒத்து போகிறது. மற்ற விஷயங்களும் ஒத்துபோகிறது எனவே கீதா எங்களது மகள் என்றனர்.

தற்போது 5 குடும்பத்தினர் கீதாவுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். இதில் யாரது மகள் கீதா என்பதை அறிய மரபணு சோதனை நடத்தப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொடூரமாக கொலைசெய்யப்பட்ட மக்கள்: திகிலூட்டும் காட்சிகள்…!!
Next post யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று முதல் புதிய நடைமுறை..!!