கனடா வரலாற்றில் முதன்முறையாக புதிய அமைச்சரவையில் அதிக அளவில் பெண்கள்..!!

Read Time:1 Minute, 24 Second

justin_canadapm_002-615x401கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் ஜஸ்டின் டிரிடியுவின் புதிய அமைச்சரவையில் 12 பெண்கள் இடம்பெறுகின்றனர்.

கடந்த 19ம் திகதி நடைபெற்று முடிந்த 42வது கனேடிய பொதுத் தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்று வெற்றி பெற்ற லிபரல் கட்சியில் தலைவர் ஜஸ்டின் டிரிடியு கனடாவில் 23வது பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இவர் எதிர்வரும் புதன்கிழமை பிரதமராக பதவியேற்பார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கவர்னர் ஜெனரல் டேவிட் ஜோன்ஸ்டன் தலைமையில் இந்த பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
பிரதமரின் பதவியேற்பை தொடர்ந்து 25 உறுப்பினர்களை கொண்ட அமைச்சரவை பதவிப்பிரமாணமும் இடம்பெறுகிறது.

25 பேர் அமைச்சர்களாக தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், அவர்களில் 12 பேர் பெண்கள் இருப்பார்கள் என தெரியவந்துள்ளது.

கனடா வரலாற்றில் அமைச்சரவையில் அதிக அளவிலான பெண்கள் இடம்பெறுவது இதுவே முதன்முறையாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலைவலி குறைய செண்பக இலை..!!
Next post இரவு விடுதி உரிமையாளர் கொலை – எஸ்.எப்.லொக்கா கைது…!!