சனி கிரகத்தின் சந்திரனில் கடல்: நாசா விண்கலம் கண்டுபிடிப்பு…!!

Read Time:1 Minute, 36 Second

6c69a327-35af-43ea-aab3-cb3c5ae64b63_S_secvpfசனிகிரகத்தின் சந்திரனில் கடல் இருப்பதை ‘நாசா’ விண்கலம் கண்டு பிடித்துள்ளது.

அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளிக்கு ‘காசினி’ என்ற விண்கலத்தை அனுப்பியது. அது கிரகங்களையும், அவற்றின் சந்திரன்களையும் கண்டு பிடித்து போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சனிகிரகத்தின் ‘என்சி லாடஸ்’ என்ற சந்திரனின் மிக அருகில் அதாவது 30 கி.மீட்டர் தொலைவில் பறந்தது.

அப்போது அதன் தென்முனையில் சந்திரனின் அடிப்பகுதியில் உறைந்த நிலையில் நீராவி மற்றும் பல மூலக்கூறுகள் இருப்பதை போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு என்சி லாடசில் ஆழமான உப்பு தண்ணீர் கடல் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அதற்கு முன்பு 2005–ம் ஆண்டில் ஆவிநிலையில் தண்ணீர் இருப்பதை போட்டோ மூலம் அறிந்தனர்.

தற்போது மிகதாழ்வாக பறந்து எடுத்துள்ள போட்டோக்கள் மூலம் சனிகிரகத்தின் என் சிலாடஸ் சந்திரனின் அடியில் கடல் இருக்கிறதா? இல்லையா? என்பன போன்ற பல மர்மங்கள் விலகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துரைப்பாக்கம் அருகே அடுக்குமாடி கட்டிட காவலாளி அடித்து கொலை- கொள்ளையர்கள் கைவரிசை?
Next post 97 வயதில் ஹைஸ்கூலை முடித்த அமெரிக்கப்பாட்டி…!!