மேகங்களுக்கு மேல் மிதக்கும் நகரம்: வேற்றுகிரகவாசிகளின் வருகையா…?

Read Time:3 Minute, 33 Second

floating_city_002-615x383மேகங்களில் மிதப்பது போல தோற்றமளிக்கும் இந்த நகரம் உண்மையா? மாயையா? ஆய்வுகள் தொடர்ந்தபடி இருக்கின்றன.

அருகில் நெருங்கிச்செல்ல முடியாத ஒரு மர்ம காட்சியாக, ஆகாயத்தில் தோற்றமளிக்கும் இந்த மாயை நகரம் சீனாவில் உள்ள ஜியாங்ஷி மற்றும் போஸான் பகுதியில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பாடா மார்கனா என்று அருகே வசிக்கும் மக்கள் அழைக்கின்றனர். அதாவது கடலிலோ அல்லது நிலத்திலோ ஒரு பொருள் இருப்பதுபோல ஏற்படும் மாயதோற்றம் என்று அர்த்தம்.

(கானல்நீரை போல).

மேகங்களுக்கு இடையே ஒரு குட்டி தீவும் அதில் பல்வேறு உயரங்களில் பல கட்டடங்கள் எழுப்பப்பட்டிருப்பது போலவும் காட்சியளிக்கிறது.

அந்த கட்டடங்கள் அடர்த்தியான நிழல்போல காட்சி தருகிறது. 2 அல்லது 3 நிமிடங்களில் மறைந்து விடுகிறது. பூமிக்கு மேலே இன்னொரு உலகம் இணையாக இறங்கியிருப்பது போல காணப்படுகிறது.

இதை நீல தூண் திட்டம் (Blue Beam Project) என்று பெயரிட்டு நாசா ஆய்வுசெய்து வருகிறது.
இது வேற்றுக்கிரக வாசிகளின் வருகை சம்பந்தமான வினோதங்களாக இருக்கலாம் என்றும், மத அமைப்புகள் இயேசுவின் இரண்டாவது வருகைக்கான அறிகுறி என்றும் வதந்தியை பரப்பி வருகின்றன.

அறிவியலாளர்கள் கூற்றுப்படி, சூரியனிலிருந்து வரும் வெப்பத்தால் மேலே உள்ள காற்றடுக்குகள் சூடாகின்றன. நிலம் மற்றும் கடல் மட்டத்தை ஒட்டியுள்ள காற்றடுக்கு குளிர்ந்து காணப்படும்.
இதனால், இரண்டுவிதமான காற்றடுக்குகள், வெவ்வேறு வெப்பநிலை, அடர்த்தியால் உருவாகிறது.

இந்த காற்றடுக்குகள் ஒன்றை ஒன்று நெருங்கியுள்ள பகுதியில் சூரிய ஒளி படும்போது ஒளியின் பாதையில் மாறுபட்ட விலகல் ஏற்படுகிறது. ஆனால் நம் மூளையில் ஒளி நேரே செல்வதான பதிவு இருப்பதால் இந்த முரண் ஒரு பொய்தோற்றத்தை நம் பார்வைக்கு உருவாக்குகிறது.

இதுவே இந்த மிதக்கும் நகரம் போன்ற மாயத்தோற்றம் ஏற்பட காரணம் என்று ஒளி விலகல் கோட்பாட்டின்படி கூறுகின்றனர்.

பூமியில் உள்ள குடியிருப்புகளை போல அந்த காட்சியில் கட்டட அமைப்பு இருப்பதால், இந்த காட்சிக்கு மைய பொருளாக நில உலகமே இருப்பது தெரிகிறது. ஒளியின் ஏதோ ஒரு விளைவுதான் இதற்கு காரணம் என்பதும் ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனாலும், உண்மையான காரணம் சரியான ஆய்வுக்குப் பிறகே தெரியவரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒலுவிலில் வீடொன்றுக்குள் நுழைந்த மூவரால் பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகம்..!!
Next post வியட்னாம் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் -சி.வி சந்திப்பு…!!