சீன தீவுகள் அருகே ரோந்து செல்வது எந்த நாட்டையும் அச்சுறுத்த அல்ல: அமெரிக்க தளபதி…!!

Read Time:2 Minute, 17 Second

c87c394a-8330-48a4-a46e-d04108d84cb9_S_secvpfதெற்கு சீன கடற்பகுதியில் உள்ள அந்நாடு அமைத்துவரும் செயற்கை தீவு அருகே அமெரிக்காவின் போர்க் கப்பல் ரோந்து செல்வது தொடர்பாக அமெரிக்கவிற்கும் சீனாவிற்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கடந்த வாரம் யு.எஸ்.எஸ் லாசன் என்ற போர்க்கப்பல் ஸ்பார்ட்லி தீவு அருகே 12 நாட்டிக்கல் மைல் தூரத்தில் ரோந்து சென்றது. அந்தப் பகுதி சீனாவுக்கு உட்பட்ட பகுதி இல்லை என்றாலும் அது சீனாவால் அமைக்கப்பட்ட செயற்கை தீவு அந்த பகுதியில் உள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா கடுமையாக கண்டித்ததுடன், தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டால் போர் ஏற்படலாம் என்றும் எச்சரித்தது.

இந்நிலையில் சீனாவிற்கு சென்றுள்ள ஆசிய-பசிபிக் பகுதிக்கான அமெரிக்க தளபதி அட்மிரல்.ஹாரி பி ஹாரிஸ் ஜூனியர் அங்குள்ள பல்கலைக்கழத்தில் அமெரிக்க மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, “ரஷ்யாவிடமிருந்து நாங்கள் சந்திக்கும் சவால் வேறுவிதமானது. ஆனால், சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் தெளிவற்ற கடல் சார்ந்த உரிமைகள் தொடர்பானது.

தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க போர்கப்பல்கள் ரோந்து செல்வது எந்த நாட்டையும் அச்சுறுத்துவதற்கு அல்ல. இந்த நடவடிக்கையானது, சர்வதேச கடல்பகுதி மற்றும் வான்பகுதியை அனைத்து நாடுகளும் பயன்படுத்துவதற்கான உரிமையை நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்படுகிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணம் செய்துகொள்ளவிருந்த காதல் ஜோடி விமான விபத்தில் பலியான சோகம்…!!
Next post போதையில் போட்டுக்கொண்ட ரேபான் கண்ணாடி டாட்டூவை 2 ஆண்டுகள் கழித்து நீக்கிய நபர்…!!