குண்டாக இருக்கிறீர்களா? நியூசி., செல்ல முடியாது!!

Read Time:3 Minute, 43 Second

பிரிட்டனை சேர்ந்த தொழில் நுட்ப வல்லுநர், தனது மனைவியுடன் நியூசிலாந்து செல்ல விரும்பினார். அவருக்கு விசா கிடைத்து விட்டது; ஆனால், அவரது மனைவிக்கு விசா மறுக்கப்பட்டு விட்டது. காரணம், அவர் மனைவி மிக குண்டாக இருந்தது தான். பிரிட்டனை சேர்ந்த ரிச்சி (35) என்பவருக்கு நியூசிலாந்தில் வேலை கிடைத்தது. தனது மனைவி ரோவன் ட்ரெசைசுடன் ( 33) நியூசிலாந்து செல்ல விரும்பினார். விசாவுக்கு விண்ணப்பித்த போது, இருவருக்குமே அனுமதி மறுக்கப்பட்டது. காரணம், உடல் எடை அதிகமாக இருந்தது தான். குண்டாக இருப்பவர்களுக்கு அதிக மருத்துவ வசதி அளிக்கப்பட வேண்டும் என்பதால், அவர்களுக்கு நியூசிலாந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.எப்படியோ போராடி, தனது உயரத்துக்கு ஏற்ற எடைக்கு வந்து விட்டார் ரிச்சி. அவருக்கு விசா கிடைத்து விட்டது. ஆனால், அவர் மனைவி ரோவன் எடை குறையவில்லை. வேறு வழியின்றி, மனைவியை பிரிட்டனிலேயே விட்டுவிட்டு, நியூசிலாந்து சென்றார் ரிச்சி.எடையை குறைப்பதற்காக டாக்டரிடம் சென்றார் ரோவன். காரணத்தை கேட்ட டாக்டர், கண்ணில் நீர் வரும் அளவுக்கு குலுங்கிக் குலுங்கி சிரித்தார். “என் வாழ்க்கையிலேயே இப்படி ஒரு பிரச்னையுள்ள நோயாளியை இப்போது தான் சந்திக்கிறேன்’ என்றார் அவர்.

தனது கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில், எடையை குறைக்க தொடர்ந்து மருத்துவம், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றை மேற்கொண்டு வருகிறார் ரோவன்.

“குண்டாக இருப்பவர்கள் ஆரோக்கியமற்றவர்கள் என்றோ, சாதாரண வாழ்க்கைக்கு தகுதியானவர்கள் இல்லை என்றோ கூறமுடியாது. வெளியிடங்களில் சுற்றுலா செல்வது, மலையில் பைக் ஓட்டுவது என்று எங்கள் வாழ்க்கை முறையை முழுமையாக மாற்றி வருகிறோம். இதனால் தான் குண்டானவர்களை, எடையை குறைக்கும் படி பிரசாரம் செய்து வருகிறோம். இதற்காக, குண்டானவர்கள் பாதிக்கும் அளவுக்கு கடுமையான விதி இருக்கக் கூடாது. ஆனால், எங்கள் சுகாதார வளத்தில் கணிசமான இழப்பை ஏற்படுத்தக் கூடியவர்களை குடியுரிமை அதிகாரிகள் ஏற்பது இல்லை’ என்று விளக்குகிறார் நியுசிலாந்தின் எடை அதிகரிப்பு எதிர்ப்பு இயக்கத்தின் செய்தித்தொடர்பாளர் ரோபின் டூமத்.

இது தொடர்பாக நியூசிலாந்து குடியுரிமை அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்தாலும், நியூசிலாந்து இணையதளத்தை பார்த்தால், அதில் குண்டாக இருந்ததற்காக பலருக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிரெஞ்ச் நிறுவனத்தை வாங்குகிறது விப்ரோ?
Next post உடல் ஈர்ப்புமிக்க மிஸ்டர் மேக்னட் ருமேனியாவில் குவியும் நோயாளிகள்!!