உடல் ஈர்ப்புமிக்க மிஸ்டர் மேக்னட் ருமேனியாவில் குவியும் நோயாளிகள்!!

Read Time:2 Minute, 3 Second

உடலில் காந்த சக்தி இருப்பதாக நம்பி ருமேனியாவைச் சேர்ந்த ஒருவரிடம் சிகிச்சை பெற குவிந்து வருகின்றனர் நோயாளிகள். ருமேனிய தலைநகர் புகாரெஸ்டில் வசிப்பவர் ஆரேல் ரேலென்யூ(40). இவரை அனைவரும் விநோதமாக பார்க்கின்றனர். இவரது உடலில் மந்திர சக்தி உள்ளதாக நம்புகின்றனர். உடலில் காந்தத்தன்மை அதிகம் உள்ளது என்றும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். இதனால் அவரை டாக்டர் மேக்னட் என்றே அழைக்கின்றனர். இவர் கை பட்டாலே நோயாளிகள் குணமடைந்து விடுவதாக நம்பிக்கை உள்ளது. எந்த சிகிச்சையும் செய்யாமல் கையால் ஆசிர்வதிப்பது போன்று தொட்டே குணப்படுத்திவிடுகிறார் என்று தினமும் இவரைப் பார்க்க வருவோர் ஏராளம்.சாதாரண மருத்துவமனை ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த இவர் இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டார். இவரது வீடு தேடி ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற வருகின்றனர். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மருத்துவமனையில் வேலை செய்தபோது பலருடன் பழக நேர்ந்தது. என்னோடு பழகியவர்கள், அவர்கள் உடலில் என் கை பட்டவுடன் ஒரு புது சக்தி ஏற்படுவதாகக் கூறினர். நோயால் பாதிக்கப்பட்டவர்களைத் தொட்டால் அவர்கள் வலி குணமடைவதாக கூறினர். குழந்தையாக இருந்தபோது எந்த பொருளை தொட்டாலும் அது என் மீது ஒட்டிக்கொள்ளும். அதிக எடையுள்ள பொருட்களையும் எளிதாக தூக்க முடியும்.இவ்வாறு ஆரேல் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குண்டாக இருக்கிறீர்களா? நியூசி., செல்ல முடியாது!!
Next post சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மார்வன் அத்தப்பத்து இளைப்பாறினார்