ஹாலோவீன் இனிப்புகளை குழந்தைகளிடம் காசு கொடுத்து வாங்கும் பல் மருத்துவர்…!!

Read Time:2 Minute, 0 Second

6986e931-c980-4993-b2af-800c689fe51e_S_secvpfஅமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தைச் சேர்ந்த பைரோன் என்னும் பல் மருத்துவர், ஒரு பவுண்டு எடையுள்ள இனிப்புகளுக்கு ஒரு அமெரிக்க டாலர் கொடுத்து குழந்தைகளிடம் ஹாலோவீனுக்குப் பின்னர் வாங்கி வருகின்றார்.

ஹாலோவீன் தினத்தன்று வித்தியாசமான உடைகளை அணிந்து அருகிலிருக்கும் வீடுகளுக்குச் செல்லும் குழந்தைகள், ‘பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் (ட்ரிக்) செய்யட்டுமா? என கேட்பது வழக்கம். அவ்வாறு வரும் குழந்தைகளுக்கு அனைவரும் இனிப்புகளை வழங்குவர்.

இம்முறையில் குழந்தைகள் சேமித்த இனிப்புகள் அனைத்தையும் உட்கொண்டால் நிச்சயம் பல் பிரச்சனை வரும் என பல பெற்றோர் வருந்துவதுண்டு. எனினும், இவற்றைக் குழந்தைகளிடம் தகுந்த காரணம் சொல்லாமல் சுலபமாக பெற்றுவிட முடியாது.

இதற்கு மாற்றாக, இந்தப் பல் மருத்துவர், குழந்தைகளிடமிருந்து காசு கொடுத்து ஹாலோவீனில் அவர்கள் சேமித்த இனிப்புக்களைப் பெற்று, இம்மாநில கடற்படை வீரர்களுக்கு உதவிபுரிந்து வரும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்குகின்றார். இத்துடன் உணவு, உடை போன்றவற்றையும் நவம்பர் மாதத்தில் ஆண்டுதோறும் கொடுத்து வருகின்றார்.

இதுபோல கடந்த ஆண்டு சுமார் ஐநூறு கிலோ இனிப்புகளை பல் மருத்துவர் பைரோன் சேமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் தந்தையின் கையில் ஸ்ட்ராபெர்ரி டாட்டூ வரைந்த செல்ல மகள்…!!
Next post தியாகராயநகரில் ஏ.டி.எம். பணம் ரூ.10 லட்சம் மாயம்: ஊழியர்களிடம் விசாரணை…!!