US ஹோட்டலில் இலையான் பிறைட்றைஸ்..!!

Read Time:2 Minute, 25 Second

timthumb (1)யாழ்ப்பாணத்தில் பிரபல ஹோட்டல் என்று கருதப்படுகின்ற US ஹோட்டலில் இலையான் பிறைட்றைஸ் தயாரித்த சம்பவம் இன்று (05.11.2015) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடா்பாக மேலும் தெரியவருவதாவது,

தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சகோதர மொழி பேசும் முகாமைத்துவ அதிகாரிகள் சிக்கன் பிறைட்றைஸ் சாப்பிடுவதற்காக யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள US ஹோட்டலுக்கு சென்றிருந்தனர்.

ஹோட்டல் வசதி வாய்ப்புக்களுடன் வெளித்தோற்றம் காணப்பட்டமையால் உணவுகள் சுத்தம், சுகாதாரத்துடன் இருக்கும் என நம்பினர். ஆனால் அவர்களுக்கு பேரதிர்ச்சியும் அருக்குளிப்பும் பிறைட்றைஸ் வாழ்க்கையில் வேண்டாம் என்ற அளவிற்கு பேரதிர்ச்சியொன்று காத்திருந்தது.

சிக்கன் பிறைட்றைசில் இலையான்கள் காணப்பட்டன. அது தொடா்பாக உடனடியாக சகோதர மொழியினர் வேலையாட்களிடமும் நிர்வாகத்திடமும் முறையிட்ட போதும் அதற்கான சரியான பதில்களோ மன்னிப்போ கோராமல் அது ஒரு சாதாரண பிரச்சினையாக எடுத்துக் கொண்டு நிர்வாகம் செயற்பட்டமையால் கடுப்பாகிய அவா்கள் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் பிரதம சுகாதார பரிசோதகரிடம் முறையிட்டனர் அவரின் கட்டளைக்கிணங்க US ஹோட்டல் பிரதேச சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பிறைட்றைசில் இலையான்கள் காணப்பட்டமை உறுதி செய்யப்பட்டு முறைப்பாட்டாளர்களிடம் எழுத்து மூலமாக வாக்குமூலம் பெறப்பட்டு உத்தியோகபூர்வமாக சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொண்டைபோடுவது எப்படி? என கூகுளிடம் சந்தேகம் கேட்ட ஆண்கள்…!!
Next post டக்லஸ் தேவாநந்தாவுக்கு எதிராக புகார்..!!