ஜெயலலிதா வழக்கை விசாரித்த நீதிபதி மீது மர்ம நபர்கள் தாக்குதல்: பரபரப்பு தகவல்…!!

Read Time:2 Minute, 20 Second

jaya_judge_002-615x463ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கை விசாரித்த நீதிபதி மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம், பட்டசோமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி சிவப்பா, 1996ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது ஜெயலலிதாவுக்கு எதிரான கலர் டி.வி. ஊழல் வழக்கை நடத்தியுள்ளார்.

அந்த வழக்கில் ஜெயலலிதாவின் 7 முன் ஜாமீன் மனுக்களையும் அவர் தள்ளுபடி செய்ததனால் ஜெயலலிதா சிறை சென்றார்.

இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமி அந்த ஆண்டுதான் ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கை தொடுத்துள்ளார்.

அரசியல் காழ்ப்பு உணர்ச்சியோடு தன் மீது பொய் வழக்குகள் போட்டிருப்பதாக அந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா மனு தாக்கல் செய்த போது, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் மூலம் விசாரிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது ஓய்வுபெற்று சொந்த ஊரில் உள்ள அவரை சில மர்ம நபர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கியுள்ளனர்.

இதையடுத்து அவர் மைசூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இதுகுறித்து சிவப்பா கூறுகையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு எழுதியுள்ளேன்.
எந்த வழக்கையும் தனிப்பட்ட முறையில் பார்த்தது இல்லை. எனவே, யார் மீதும் சந்தேகம் இல்லை. காவல் துறைதான் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தானும் விஷமருந்தி மகளுக்கும் விஷத்தை அருந்த கொடுத்த தாய்…!!
Next post பிரிந்திருந்து காதலிக்கும் நபர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை…!!