பிரிந்திருந்து காதலிக்கும் நபர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை…!!

Read Time:3 Minute, 57 Second

laught-500x500காதல் என்பது அனைவரும் வேண்டும் வரம். ஆனால், அது தானாக நடக்க வேண்டும். நாமாக அமைத்துக் கொள்வது காதலாகிவிடாது. நெருங்கி இருந்து சண்டையிட்டு கொண்டே இருப்பவர்களும் இருக்கிறார்கள், தொலைவில் இருந்து ஒற்றுமையாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

இதில் நாம் இரண்டாம் வகையான தொலைவில் வெளியூர்களில் இருந்து காதலிக்கும் நபர்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம். இவர்களுக்குள் சண்டை ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது., இதற்கு மூன்றாம் நபர்களைவிட, இவர்களே தான் காரணமாக இருப்பார்கள்.

அந்த காரணங்கள் என்ன? தொலைவில் இருந்து காதலிப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை யாவை என்பது பற்றி இனிக் காணலாம்…

நம்பிக்கை

வெளியூர்களில் இருந்து காதலிக்கும் நபர்கள் முதன் முதலில் கடைபிடிக்க வேண்டிய பண்பு நம்பிக்கை. இது இல்லாவிடில் அந்த உறவில் பிரிவு எளிதாக ஏற்பட்டுவிடும்.

மூன்றாவது நபர்

தொலைவில் இருந்து உறவில் இருக்கும் நபர்கள் எக்காரணம் கொண்டும் அந்த மூன்றாம் நபருக்கு இடம் கொடுத்துவிட வேண்டாம். இது மனதை அலைபாய வைத்துவிடும். எதுவாக இருந்தாலும் நெருக்கம் காட்டாமல் லிமிட்டாக இருந்து பழகுங்கள்.

பொறுமை

வெளியூர்களில் இருந்து காதலிக்கும் நபர்கள் பொறுமையாக இருத்தல் வேண்டும். இங்கு இவருக்கு என்ன பிரச்சனை, என்ன சூழலில் இருக்கிறார் என்று புரிந்துக் கொள்ள வேண்டும். நினைத்த நேரத்தில் பேச முடியவில்லை என கோபம் அடைவது தவறு.

சுதந்திரம்

நீங்கள் இருவரும் ஒன்றாக இல்லை என்பதற்காக 24 மணி நேரமும் அவர் என்ன செய்கிறார் என்று கண்காணிக்க நினைப்பது தவறு. அவருக்கான சுதந்திரத்தை தர வேண்டியது அவசியம்.

ஆச்சரியம் நிகழ்த்துங்கள்

நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்கள் துணையை பார்க்க போகும் நீங்கள் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டும். பரிசு, காதல், சில மாற்றங்கள் என அவரது மனதில் பசுமரத்தாணி போல பதியும்படி ஏதாவது நீங்கள் செய்தாக வேண்டியது கட்டாயம்.

வெளியூர் பயணங்கள்

நீண்ட நாள் கழித்து அவரை பார்க்கும் போது, அவரை எங்கேனும் அழைத்து செல்லுங்கள். அது வெறும் இடமாக இன்றி, உங்களை அவரது மனதில் என்றும் நினைக்கும் வண்ணம் இருக்க வேண்டும். அந்த பயணம் மனதளவில் முடிவற்றதாக அமைய வேண்டும்.

ஒப்பீடுகள் வேண்டாம்

உங்கள் துணையை, அவர் அப்படி செய்கிறார், இவர் இப்படி செய்கிறார் என்று யாருடனும் ஒப்பிட வேண்டாம். இது அவரை மனதளவில் பெரிதாய் புண்படுத்தும்.

அவருக்காக இருங்கள்

என்னதான் நீங்கள் தொலைவில் இருந்தாலும், அவருக்கு உங்கள் துணை தேவைப்படுகிறது என்ற நேரத்தில் அவருக்காக நீங்கள் அங்கிருக்க வேண்டியது அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெயலலிதா வழக்கை விசாரித்த நீதிபதி மீது மர்ம நபர்கள் தாக்குதல்: பரபரப்பு தகவல்…!!
Next post டிஸ்னியின் நாயகிகளை முதுமையடையச் செய்த பேஸ்புக் கலைஞர்…!!