டிஸ்னியின் நாயகிகளை முதுமையடையச் செய்த பேஸ்புக் கலைஞர்…!!

Read Time:2 Minute, 3 Second

8734275c-3283-47a3-a632-657486c1fcfc_S_secvpfடிஸ்னியால் உருவாக்கப்பட்ட இளவரசிகள் முதுமையடைந்தால் எப்படியிருக்கும்? இவர்களின் கதாபாத்திரங்களுக்கு படத்தில் சொல்லப்படும் வயது முதல் கணக்கிட்டு, அவர்களது தற்போதைய தோற்றம் எப்படியிருக்கும் என ஒரு கலைஞருக்கு யோசனை வந்தது.

கடந்த 1937-ம் ஆண்டு வெளிவந்த ‘ஸ்னோ வொயிட் அண்டு செவன் ட்வார்ஃப்ஸ்’ படத்தில் ஸ்னோ வொயிட்டுக்கு பதினான்கு வயது. தற்போதோ தொன்னூற்று இரண்டு. கடந்த 1950-ம் ஆண்டு வெளிவந்த படத்தில் நாயகி சிண்ட்ரெல்லாவுக்கு பத்தொன்பது வயது. தற்போதோ எண்பத்து நான்கு.

கடந்த 1959-ம் ஆண்டு வெளிவந்த ‘ஸ்லீப்பிங் பியூட்டி’ படத்தில் இளவரசி அரோராவுக்கு பதினாறு வயது. தற்போதோ எழுபத்து இரண்டு. கடந்த 1989-ம் ஆண்டு வெளிவந்த ‘த லிட்டில் மெர்மெய்டு’ படத்தில் ஏரியலுக்கு பதினாறு வயது. தற்போதோ நாற்பத்து இரண்டு.

பியூட்டி அண்டு த பீஸ்ட் திரைப்படத்தில் வந்த இளவரசி பெல்லுக்கு 1991-ம் ஆண்டு பதினேழு வயது, தற்போதோ நாற்பத்து ஒன்று. 1992-ம் ஆண்டு வெளியான அலாதீன் படத்தின் நாயகியான ஜாஸ்மினுக்கு படத்தில் பதினைந்து வயது, தற்போதோ முப்பத்து எட்டு.

இறுதியாக கடந்த 1998-ம் ஆண்டு வெளியான டிஸ்னியின் சீனக் கதையான ‘ஃபா முலன்’ நாயகி முலனுக்கு தற்போது முப்பத்து மூன்று வயது என நமது மனதுக்கு நெருக்கமான டிஸ்னி நாயகிகளை பேஸ்புக்கில் இந்த கலைஞர் மூப்படைய வைத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரிந்திருந்து காதலிக்கும் நபர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை…!!
Next post அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 4 பேரை கத்தியால் குத்திய மாணவர் சுட்டுக்கொலை…!!