கலிபோர்னியாவில் வாலிபர் மூளைக்குள் புழு: ஆபரேஷன் செய்து அகற்றினர்..!!
Read Time:1 Minute, 21 Second
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்தவர் லூயூஸ்ஆர்டிஸ் (வயது 35). இவருக்கு திடீரென தாங்கமுடியாத தலைவலி ஏற்பட்டது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார்.
அவருடைய தலையை ஸ்கேன் செய்து பார்த்த போது மூளைக்கு உள்ளே புழு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது. அது மூளைக்குள் செல்லும் ரத்தத்தை தடுத்து கொண்டிருந்தது. இதனால் தான் அவருக்கு தலைவலி ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து தலையில் ஆபரேஷன் செய்து புழுவை வெளியே எடுத்தனர். மூளைக்குள் புழு எப்படி சென்றது என்பது ஆச்சரியமாக உள்ளது. இதுதொடர்பாக டாக்டர்கள் கூறும்போது, குடிக்கும் தண்ணீரில் புழுவின் முட்டை இருந்திருக்க வேண்டும். அது எப்படியோ ரத்தத்தில் கலந்து மூளைக்கு சென்றுள்ளது. அங்கு முட்டை லார்வாவாக வளர்ந்து பின்னர் புழுவாக மாறியிருக்கிறது என்று கூறினர்.
Average Rating