ஜன்னல் வழியே தவறி விழுந்த சிறுவன்: 16,500 பவுண்டுகள் அபராதம் செலுத்த வைத்த நீதிமன்றம்…!!

Read Time:2 Minute, 10 Second

nursery_owner_fined_002-615x495பிரித்தானியாவில் சிறுவர் பள்ளி ஒன்றில் திறந்திருந்த ஜன்னல் வழியே சிறுவன் தவறி விழுந்த வழக்கில் பள்ளி நிர்வாகம் அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியாவில் Birmingham பகுதியில் அமைந்துள்ள Munchkins சிறுவர் பள்ளியில் திறந்திருந்த முதல் மாடி ஜன்னல் வழியே 2 வயது சிறுவன் தவறி விழுந்துள்ளான்.

Billy Coniff எனும் அந்த சிறுவன் தவறி விழுந்த போது அதிர்ஷ்டவசமாக தலை கீழாக விழாதது பெரும் விபத்தை தவிர்த்துள்ளதாக அவனது தாயார் தெரிவித்துள்ளார்.

சிறுவன் பில்லி இருந்த அறையில் மாணவர்களை கவனிக்கும் பொருட்டு 2 ஊழியர்கள் இருந்துள்ளனர், ஆனால் அவர்கள் வேறு பகுதியில் உள்ள மாணவர்களை அந்த நேரம் கவனித்து வந்த்தாக கூறப்படுகிறது.

அந்த அறையில் காற்றோட்ட வசதிக்காக 4 ஜன்னல்கள் இருந்தும் அவை அனைத்துமே போதிய பாதுகாப்பு அமைப்புகளை பள்ளி நிர்வாகம் செய்யவில்லை என சிறுவன் பில்லி தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.

சிறுவன் பில்லி சிறுகாயங்களுடன் தப்பியது அவனது அதிர்ஷ்டமென்றே முதலுதவி அளித்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பள்ளி நிர்வாகியான Suzanne Holmes தமது கடமையில் இருந்து தவறியதை ஒப்புக்கொண்ட்தை அடுத்து அவருக்கு அபராதமாக 2500 பவுண்டுகள் நீதிமன்றம் விதித்துள்ளது.
மேலும் நீதிமன்ற செலவீன்ங்களுக்காக 14,000 பவுண்டுகளும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நட்ட ஈடு கோரி வழக்கு தொடரப்படும் – பீல்ட் மார்ஷல்…!!
Next post இறந்துபோன நபருக்கு குழந்தை பிறந்த மருத்துவ விநோதம்…!!