பாலக்கோடு அருகே இளம்பெண் தலை துண்டித்து கொலை: மாமனார் வெறிச்செயல்…!!

Read Time:8 Minute, 42 Second

48527c4d-0dd9-4d3c-b5cf-489a4aa72a4e_S_secvpfதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கத்தல அள்ளி கிராமத்தை சேர்ந்த செல்போன் கடை அதிபர் மனைவி ஆனந்தி (வயது 25). இவர் நேற்று காலை கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இவரது தலையை துண்டித்து கொலை செய்த மாமனார் சுப்பிரமணி தலையை ரோட்டில் வீசி விட்டு பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இன்ஸ்பெக்டர் ரத்தினக்குமார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தார்.

மருமகளை கொன்றது ஏன் என்பது குறித்து சுப்பிரமணியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. மருமகளால் தொடர்ந்து குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு நிம்மதி குறைந்ததால் அவரது தலையை துண்டித்து கொன்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது கிடைத்த தகவல்கள் வருமாறு:–

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள குத்தல அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (55). இவரது மனைவி ஏகம்மாள். இவர்களுக்கு சங்கீதா என்ற மகளும், ரமேஷ் (30) என்ற மகனும் உள்ளனர். செல்போன் கடை வைத்து உள்ள ரமேசுக்கும், தர்மபுரி கோல்டன் தெருவை சேர்ந்த மகேஸ்வரியின் மகள் ஆனந்திக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சுவேதா ஸ்ரீ (3) என்ற மகள் உள்ளார். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திய இவர்கள் வாழ்க்கையில் நரி அள்ளி கிராமத்தை சேர்ந்த சரண்யா என்ற பெண் புயலாக வந்து சேர்ந்தார்.

ரமேஷ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யாவை இரண்டாவது திருமணம் செய்தார். அவரை ஓசூரில் தனிக்குடித்தனம் வைத்தார். இந்த தகவல் தெரிய வந்ததும் ஆனந்தி கணவர் மற்றும் மாமனார்–மாமியாரிடம் தகராறு செய்தார். சரண்யாவை கைவிட்டு தன்னுடன் வாழ வருமாறு கூறியும் ரமேஷ் கேட்கவில்லை. இதனால் அவர் தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். சிறிது காலம் காத்திருந்த ஆனந்தி தனது கணவர் திருந்தி வருவார் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவர் திருந்தவில்லை. இதனால் இரண்டாவது திருமணம் செய்த தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆனந்தி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ரமேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். கோர்ட்டில் வழக்கு நடந்த போது ரமேஷ் தரப்பினர் ஆனந்தியுடன் பேச்சு நடத்தி சமரசம் ஆனார்கள். இதனால் வழக்கை ஆனந்தி வாபஸ் பெற்றார். இதற்கு பலனாக ரமேஷின் தந்தை சுப்பிரமணி தனது பெயரில் உள்ள வீட்டை ஆனந்தியின் மகள் சுவேதாஸ்ரீ பெயரில் எழுதி வைத்து விட்டு தனது மகன் ரமேஷை பாதுகாவலராக நியமித்தார்.

பின்னர் ரமேஷ் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தார். ஆனந்தி கர்ப்பம் அடைந்தார். தாயார் வீட்டுக்கு சென்று தங்கி இருந்த போது கர்ப்பம் கலைந்து விட்டது. இதனால் அவரை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்டித்தனர். என்றாலும் ஆனந்தி மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்து வாழ்க்கை நடத்தினார். சிறிது காலம் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். பின்னர் மீண்டும் சரண்யாவிடம் இருந்த தொடர்பை ரமேஷ் புதுப்பித்து கொண்டார்.

இதுபற்றி தெரிய வந்ததும் மீண்டும் கணவன்– மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. கணவருடன் சண்டை போடாமல் அனுசரித்து போகுமாறு ரமேஷின் தந்தை சுப்பிரமணி, தாயார் ஏகம்மாள் மற்றும் ரமேஷின் சகோதரி சங்கீதா ஆகியோர் கேட்டுக்கொண்டனர். ஆனால் ஆனந்தி கேட்கவில்லை. அவர் கணவரின் குடும்பத்தினரிடம் தகராறு செய்து விட்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

பின்னர் பாலக்கோட்டில் உள்ள வக்கீல் ஒருவர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கணவன்–மனைவி இருவரும் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்யப்பட்டது. மீண்டும் கணவனின் வீட்டுக்கு ஆனந்தி வந்தார். ஆனால் சரண்யாவுடன் உள்ள தொடர்பை ரமேஷ் கைவிட மறுத்து விட்டார். இது பற்றி மீண்டும் ஆனந்தி கணவரிடம் கேட்க அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அடிக்கடி ஆனந்தி தகராறு செய்வதால் ஆத்திரம் அடைந்த ரமேஷ், அவரது சகோதரி சங்கீதா, தந்தை சுப்பிரமணி, தாயார் ஏகம்மாள் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ஒரு அறையில் ஆனந்தியை அடைத்து வைத்து சரமாரியாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர் நள்ளிரவு 1 மணிக்கு தர்மபுரியில் உள்ள தனது தாயாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

அப்போது போனை பிடுங்கிய ரமேஷ் அதை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இது குறித்து குத்தல அள்ளியில் உள்ள ஊர் கவுண்டரிடம் ஆனந்தியின் தாயார் மகேஸ்வரி போன் மூலம் தகவல் தொவித்தார். ஊர் கவுண்டர் ரமேசின் வீட்டுக்கு சென்று இரவு நேரத்தில் தகராறு வேண்டாம் என்றும், காலையில் பேசிக் கொள்ளலாம் என்றும் கூறி விட்டு வந்து விட்டார்.

நேற்று காலை வீட்டில் இருந்த ஆனந்தி குழந்தையுடன் தப்பினார். இதை கவனித்து விட்ட மாமனார் சுப்பிரமணி மருமகளை கண்டித்தார். வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும், அடிக்கடி தகராறு செய்வதால் குடும்ப கவுரவம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். ஆனால் ஆனந்தி இதை ஏற்கவில்லை. மாமனாரை திட்டினார். அவர் ஆனந்தியிடம் இருந்த குழந்தையை பிடுங்கினார். குழந்தையை கொடுத்து விடுமாறு ஆனந்தி கேட்டு தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மாமனார் சுப்பிரமணி தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து ஆனந்தியின் கையில் வெட்டினார்.

பின்னர் தலையை வெட்டி துண்டித்தார். ஆனந்தி அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அந்த தலையை எடுத்துக் கொண்டு சிறிது தூரம் நடந்து சென்ற சுப்பிரமணி அதை ரோட்டு ஓரத்தில் வீசி விட்டு நேராக பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். போலீசார் சுப்பிரமணியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். துண்டித்த தலையும், உடலும் கைப்பற்றப்பட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நம்பியூர் அருகே பெண் டெய்லர் கற்பழித்து கொலை…!!
Next post ஏவுகணை மூலம் பிரித்தானிய விமானத்தை தகர்க்க முயற்சியா? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் (வீடியோ இணைப்பு)…!!