ஏவுகணை மூலம் பிரித்தானிய விமானத்தை தகர்க்க முயற்சியா? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் (வீடியோ இணைப்பு)…!!

Read Time:2 Minute, 42 Second

britain_flight_002எகிப்தில் ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்னரே பிரித்தானியா விமானம் ஒன்று ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிய தகவல்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்து நாட்டில் இருந்து புறப்பட்ட ரஷ்ய விமானம் ஒன்று கடந்த சனிக்கிழமை தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணம் செய்த 224 பேரும் பலியாகினர்.

வெடிகுண்டு தாக்குதல் காரணமாக தான் இந்த விபத்து ஏற்பட்டதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே பிரித்தானியா விமானம் ஒன்று ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பியது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் பிரித்தானியாவின் லண்டன் ஸ்டேன்ஸ்டெட் விமான நிலையத்தில் இருந்து ஷார்ம் எல் ஷேக் நகரை நோக்கி தாம்சன் விமானம் ஒன்று 189 பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்தது.

அப்போது ஏவுகணை ஒன்று விமானத்தை நோக்கி வேகமாக வருவதை விமானி பார்த்துள்ளார்

உடனடியாக அவர் விமானத்தை இடது புறமாக திருப்ப உத்தரவிட்டுள்ளார். விமானியின் இந்த சாதூர்ய முடிவினால் 1000 அடி இடைவேளையில் விமானம் மாபெரும் விபத்தில் இருந்து தப்பியது.

அதன்பின் விமானம் பாதுகாப்புடன் தரையிறங்கியது. எனினும் இந்த சம்பவம் குறித்து பயணிகளிடம் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

எகிப்து நாட்டு ராணுவத்தினரின் பயிற்சியின் போது இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஏவுகணையை வேறொரு விமானமும் பார்த்ததாக பின்னர் தெரிவித்தது. இந்நிலையில் ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து இந்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

இந்த தகவலை பிரித்தானிய போக்குவரத்து அமைச்சகமும் உறுதிபடுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலக்கோடு அருகே இளம்பெண் தலை துண்டித்து கொலை: மாமனார் வெறிச்செயல்…!!
Next post கர்ப்பமாக இருக்கிறேனா? பிரசவத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு ஷாக்கான பெண் (வீடியோ இணைப்பு)..!!