கர்ப்பமாக இருக்கிறேனா? பிரசவத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு ஷாக்கான பெண் (வீடியோ இணைப்பு)..!!
Read Time:1 Minute, 24 Second
அமெரிக்காவில் குழந்தை பிறக்க ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே, தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்துள்ளார் ஜுடி பிரவுன் என்ற பெண்.
அமெரிக்காவை சேர்ந்த 47 வயதான ஜுடி பிரவுன் என்ற பெண்ணுக்கு திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லை.
இந்நிலையில் திடீரென அடிவயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்படவே, மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாகவும், பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக பிரசவ அறைக்கு கொண்டு செல்லப்பட்டு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
சில மாதங்களுக்கு முன்பு தனது உடல்நிலையில் மாற்றம் தெரிந்தும், முதுமையினால் அவ்வாறு இருப்பதாக நினைத்திருந்தாராம் ஜுடி பிரவுன்.
குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் மூழ்கிய தம்பதியினர், அவளுக்கு கரோலின் ரோஸ் என பெயர் சூட்டியுள்ளனர்.
Average Rating